தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் மோசமான நிர்வாகத்தால் ரூ11,679 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை துறையின் (சி.ஏ.ஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய ரூ280.37 கோடியை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் பல ஆண்டுகாலமாக வசூலிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை. தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே தங்களது ஆட்சிக் காலம்தான் பொற்காலம் என பேசிவருகின்றன. ஆனால் இந்த 2 கட்சிகளின் ஆட்சி காலங்களிலும் நிர்வாகம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறது என்பதை மத்திய தணிக்கைத் துறையான சி.ஏ.ஜியின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான (இதில் தி.மு.க, அ.தி.மு.க. 2 கட்சிகளின் ஆட்சிக் காலமும் அடங்கும்) தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த மத்திய தணிக்கை துறை அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் விவரம்: தமிழகத்தில் மின் பற்றாக்குறை குறித்து அறிந்திருந்தும் நீண்டகால கொள்முதல் திட்டங்களை வகுக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தவறிவிட்டது. “உங்களால் தான்” என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு.. 2006-2007 ஆம் ஆண்டு காலத்தில் இருந்த 1,193 மெகாவாட் மின்பற்றாக்குறை என்பது 2009-10ஆம் ஆண்டுகாலத்தில் 3,860 மெகாவாட் பற்றாக்குறையாகக் கூடும் என கணித்திருந்தும் அதற்கேற்ப குறுகிய, நீண்டகால ஒப்பந்தங்களை மிக தாமதமாக மேற்கொண்டது. மின் கொள்முதல் டெண்டர்களை முறையாக மதிப்பீடு செய்யாதது, ஒரே நேரத்தில் பல டெண்டர்களை இறுதி செய்வது உள்ளிட்ட மோசமான நிதி நிர்வாகத்தால் தமிழக மின்சார வாரியத்துக்கு ரூ.11,679 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரையில் தனியாரிடம் குறுகிய காலத்துக்கு மின்சாரம் வாங்குவதற்கு 7 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களில் குறிப்பிட்ட காலத்தில் 80% மின்சாரத்தை நிறுவனங்கள் வழங்காமல் போனால் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு நட்ட ஈடு தர வேண்டும் என்ற நிபந்தனையும் இடம்பெற்றுள்ளது. இந்த தனியார் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்தில் மொத்தம் 264.90 கோடி யூனிட் மின்சாரம் வழங்கவில்லை. மொத்தம் 264.90 கோடி யூனிட் மின்சாரத்தை வழங்காததால் தனியார் நிறுவனங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்துக்கு ரூ280.37 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால் ரூ280.37 கோடி இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு மின்பகிர்மான கழகமானது 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வசூலிக்கவே இல்லை.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகமானது அதிக விலைக்கு மின்சாரம் வாங்கிய வகையில் ரூ.109 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்குத் தர வேண்டிய தொகையை தராமல் தனியார் மின்சார உற்பத்தியாளர்கள் தொடர்ந்தும் லாபமடைந்தும் வருகின்றனர். அதேபோல் சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் பெல் நிறுவனத்துடன் மின் உற்பத்தி திட்டத்துக்கு (உடன்குடி மின் திட்டம்) ஒப்பந்தம் செய்து பின் ரத்து செய்யப்பட்ட வகையில் ரூ21.64 கோடி தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1,265.96 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. மத்திய, மாநில அரசுகளுடன் இத்துறையினர் இணைந்து செயல்படாததால் ரூ299.34 கோடி மதிப்பிலான திட்டங்கள் தாமதமடைந்துள்ளது. தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை, பாலங்களைக் கட்டுவதற்கான எந்த ஒரு மாஸ்டர் பிளானையும் பெற்றிருக்கவில்லை. தமிழக அரசுக்கு சொந்தமான அரியலூர், ஆலங்குளம் சிமெண்ட் ஆலைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்படுகிறது. அதேபோல் தமிழக அரசின் கிராபைட் ஆலைகள், சர்க்கரை ஆலைகள், சிப்காட் வளாகங்கள் வெளியேற்றும் கழிவுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 30,000 ஏக்கருக்கும் அதிகமாக நெற்பயிர்களை பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காததால் அரசுக்கு ரூ.28.54 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2013-14ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு மிக மோசமாக செயல்பட்டுள்ளது. தமிழக சிறைகளுக்குள் போதுமான கண்காணிப்புகள் இல்லை. சிறை மருத்துவமனைகள் படுமோசமாக உள்ளன. சிறைகளுக்குள் செல்போன் கடத்தல்களும் தற்கொலைகளும் சகஜமாகி இருக்கிறது. 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக மத்திய சிறைகளில் உள்ள 65 சிசிடிவி காமிராக்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டதில் 17 மட்டுமே செயல்படக் கூடியவையாக இருந்தன. சிறைகளில் கண்காணிப்புகளை மேற்கொள்ள எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. என நீள்கிறது சி.ஏ.ஜியின் அறிக்கை. நல்(லா….)ட்சிதான் போங்க
