மல்டி மீடியா மாணவர்களுக்கு மவுசு! படித்து கொண்டிருக்கும் போதே வேலை!!

எஞ்சினியரிங் உள்பட பல பெரிய படிப்புகளை படித்து விட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் நிலையில், மல்டிமீடியா மாணவர்களுக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே வேலைவாய்ப்பு அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வருகின்றது

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மல்டிமீடியா மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய அமேசான் உள்பட பெரிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அடுத்த மாதம் வரவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.அமேசான், டிசிஎஸ் போன்ற பெரிய கம்பெனிகளுக்கு மல்டிமீடியா மாணவர்கள், குறிப்பாக டிசைனிங் மாணவர்கள் அதிக அளவில் தேவைப்படுவதாகவும் அதனால் அந்த வேலைக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதிநேர ஊழியராக சேர்த்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ ஒன்றை அடுத்த மாதம் நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து மல்டிமீடியா மாணவர்களுக்கு மவுசு அதிகரித்து உள்ளதால் அந்த படிப்பை படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் கொள்கின்றனர். மல்டிமீடியா படிப்பிற்கு கொஞ்சம் அதிகம் செலவானாலும் படித்து முடித்தவுடன் அல்லது படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்பு என்பதால் இந்த படிப்பை மாணவர்களும் பெற்றோர்களும் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts:

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் “ஹர்காரா” ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் !!

மொபைல்போன் தொழிலுக்கு ரூ.48,000 கோடி! 2 லட்சம் பேருக்கு வேலை !!

'டியூட்' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

'காமெடி கிங்' கவுண்டமணி நடிக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு!

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !

இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'மாயவலை' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

*மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறைக்கு கொடுத்துவரும் ஆதரவால் மற்றொரு மைல்கல்லை சாதனை உருவாகியுள்ளது!*

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!