நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!

குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது.

அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.

பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன.

வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் கூட்டணியின் முதல் திரைப்பட அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சிறந்த உள்ளடக்கம் மற்றும் பரந்து விரிந்த வீச்சைக் கொண்ட பிரம்மாண்ட படைப்பாக இத்திரைப்படம் இருக்கும் என்று தயாரிப்புக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்

Related posts:

தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த டிராபிக் சிக்னல் !

நில உச்சவரம்பு சட்டப்படி 16ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது ? கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். ?

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.!

"18 மைல்ஸ்" படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்..!

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது...

ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ், ஆல்ஃபா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை அலியா பட்!

‘கங்குவா’ படம் பெரிய தலைவாழை விருந்து-நடிகர் சூர்யா!