‘அவதார்’ திரைப்படத்திற்கு இந்தியாவின் ஆன்மீகத்துடன் வலுவான தொடர்பு இருக்கிறது என்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்!*

இந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஆர்வம், சமூக ஊடகங்களில் ரசிகர்களின் உரையாடல், படத்தின் பிரம்மாண்டம், அதன் உணர்வுப்பூர்வமான காட்சிகள் என படத்தை ரசிகர்கள்  உற்சாகத்துடன் வரவேற்க தயாராக உள்ளனர்.
உலகளவில் வெளியிடுவதற்கு முன்பாகவே, ‘அவதார்’ படத்தின் தேவநாகரி லோகோ பனாரஸில் கங்கை நதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மலைத்தொடரில் வெளியிடப்பட்டது. இந்தி பேசும் பார்வையாளர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும், ’அவதார்’ திரைப்படம் இந்தப் பகுதியில் வைத்திருக்கும் கலாச்சார தொடர்பை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மேலும், இந்தப் படத்தை ஒட்டுமொத்த இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் உத்தியாகவும் இது அமைந்தது.
’அவதார்’ படத்தின் கதை இயல்பாகவே இந்தியாவின் ஆன்மீகத்துடன் வலுவான தொடர்பு கொண்டிருக்கிறது என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அடிக்கடி பேசியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ’அவதார்’ படத்தின் அர்த்தத்தை விளக்குமாறு கேட்டபோது ஜேம்ஸ் கேமரூன் கூறியதாவது, “இந்து கடவுள்களில் ஒருவர் அவதாரம் எடுப்பதன் கதைதான் இது. இந்த படத்தில் மனித தொழில்நுட்பம் ஒரு நபரின் புத்திசாலித்தனத்தை தொலைதூரத்தில் அமைந்துள்ள உடலில் செலுத்தும் திறன் கொண்டது” என்றார்.
இந்து புராணங்கள் மற்றும் இந்து சமயக் கடவுள்கள் வளமான மற்றும் ஆற்றல்மிக்க சக்தி கொண்டவை என அதன் மீதான தனது நீண்டகால ஈர்ப்பையும் ஜேம்ஸ் கேமரூன் வெளிப்படுத்தியுள்ளார். ’அவதார்’ என படத்தின் தலைப்பில் இருந்து, உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் இந்தியர்களோடும் இந்து மதத்தோடும் தொடர்புடையதாக உள்ளது என்கிறார்.

இந்த ஆழமான தொடர்புகள்தான் இந்திய ரசிகர்கள் மத்தியில் ‘அவதார்’ திரைப்படம் புகழ்பெற காரணங்கள். புதிய தேவநாகரி அடையாளம் அந்த இணைப்புக்கு ஒரு சான்றாகவும், ’அவதார்’ படத்தின் மிகவும் ஆர்வமுள்ள பார்வையாளர்களில் ஒன்றாக இந்தியாவை இணைப்பதாகவும் உள்ளது.

20த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்தியாவில் ’அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை டிசம்பர் 19 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியt மொழிகளில் வெளியிடுகிறது.

Related posts:

"'தணல்' படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி "- நடிகை லாவண்யா திரிபாதி!

"’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நான் இணை ஹீரோ" - நடிகர் சரத்குமார்!

'எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் வெளியிட்ட 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’ திரைப்படம் வரும் 4 ஆம் தேதி வெளியாகிறது!

‘புஷ்பா 2’ படத்தில் இருந்து 'தி கப்புள் சாங்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'VD12''கிங்டம்'படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.!

பாத்ரூமிற்குள் செல்போன் எடுத்துச்செல்வதால் ஏற்படும் விளைவுகள் !