ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 63,912 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஆக்டிவா மாடலை விட ரூ. 8000 விலை அதிகம் ஆகும்.புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி: ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 65,412 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய ஆக்டிவா 6ஜி மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா பிராண்டின் மூன்றாவது பி.எஸ். 6 வாகனமாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.ஆக்டிவா 6ஜி மாடலில் ஹோண்டாவின் PGM-Fi எனும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பம் முன்னதாக ஆக்டிவா 125 மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்கூட்டரின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்.
ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் ஏ.சி.ஜி. ஸ்டார்ட்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்ட, பாஸ் ஸ்விட்ச், வெளிப்புற ஃபியூயல் ஃபில்லர் கேப், முன்புறம் 12 இன்ச் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 3-ஸ்டெப் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்: பிளாக், டேசில் எல்லோ மெட்டாலிக், பியல் பிரெஷியஸ் வைட், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், பியல் ஸ்பார்ட்டன் ரெட் மற்றும் க்ளிட்டர் புளூ மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது.