ஸ்மார்ட்போன் மூலம் மக்களின் தகவல்களை திருடும் ஆப்ஸ்!

ப்ளே ஸ்டோரிலிருந்து சமீபத்தில் பல மால்வேர் ஆப்ஸ்களை கூகுள் நிறுவனம் தனது தளத்திலிருந்து தொடர்ந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த ஆப்ஸ்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை திருடுவதாகவும் அதுமட்டுமின்றி திருடிய தகவல்களைப் பிற ஆப்ஸ்களுக்கும் பகிர்வதாக அதிர்ச்சி தரும் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

மக்களின் தகவல்களை திருடும் ஆப்ஸ்களை கூகுள் நிறுவனம் அதன் ப்ளே ஸ்டோர் ஆப்ஸ்-லிருந்து சுமார் 1325 ஆப்ஸ்களை நீக்கியுள்ளது. இதில் சில ஆப்ஸ்கள் பயனர்களின் தகவல்களை நேரடியாகத் திருடியுள்ளது.இந்நிலையில் ஒரு ஆப்ஸ்-ஐ ஸ்மார்ட்போனில் டவுண்லோட் செய்தவுடன் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேலரி, காண்டாக்ட் போன்ற முக்கியமான விபரங்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். அனுமதி கொடுத்த பின்னர் பயனர்களின் தகவல்களை திருடியது மட்டுமின்றி அனுமதி கொடுக்காத பயனர்களின் தகவல்களையும் சேர்த்துத் திருடியுள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.