ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!

மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் கதாபாத்திரமான தால்சிமின் வல்லமை யோகா மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்த சிறப்பு நிகழ்வில், தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டதுடன், யோகி கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஏன் மிகச் சரியான தேர்வு என்பதையும் அனைவருக்கும் நிரூபித்தார். தால்சிம் வேடமிட்ட காஸ்பிளேயர்ஸூடன் மேடையில் அமர்ந்து தொடர்ந்து 15 நிமிடங்கள் தியானம் செய்து தனது யோகக்கலை திறமையை நிரூபித்தார்.

இந்த தியானத்தை அமைதியாக நிறைவு செய்த பிறகு, பதஞ்சலி யோக சூத்திரத்தில் இடம்பெறும் ஒரு சிறப்பு நுட்பத்தை தான் பயன்படுத்தியதாக வித்யுத் ஜம்வால் தெரிவித்தார். இந்த நுட்பம் 15 நிமிடங்கள் மூச்சை அடக்குவதற்கு மட்டுமின்றி, வாழ்க்கையில் பல்வேறு உயரங்களை அடையவும் தனக்கு உதவியதாக அவர் கூறினார்.

இந்த நுட்பத்தை இளம் தலைமுறையினருக்கும் தான் கற்றுக் கொடுத்து வருவதாக வித்யுத் தெரிவித்தார். தியானம் செய்வது, எந்தவொரு விஷயமும் முழுமையான பலனை அடைய காலம் தேவை என்பதைப் புரிந்துகொள்வது, தொடர்ந்து முயற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் நமது இலக்கை அடைய முடியும் என்பதே இதன் நோக்கம் என்றார்.

“இளம் தலைமுறையினரிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கொஞ்சம் நிதானமாக இருங்கள். ‘இதை எப்படி அடைவது?’ என்று கேட்கிறீர்கள். நான் இதை அடைய எனக்கு ஒரு காலம் தேவைப்பட்டது. நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரும் எதை நோக்கியாவது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதுவும் செய்யாமல் நிதானமாக இருங்கள். அந்தத் திறமை உங்களை வாழ்க்கையில் வெகுதூரம் அழைத்துச் செல்லும். இதைத்தான் நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம், 2026 அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Related posts:

R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் 'FOUR சிக்னல்'

‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் மூச்சு விட வழி பிறந்துள்ளது!

'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது!

ஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்கிறது!

உஸ்தாத் ராம் பொதினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், ஆகியோரின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமாண்...

SNAPCHAT SOLIDIFIES SOUTH INDIA FOCUS, LAUNCHES FLAGSHIP CREATOR CONNECT IN CHENNAI AMID 4X CONTENT GROWTH!

நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் !மத்திய அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது !!

“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!