‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் மூச்சு விட வழி பிறந்துள்ளது!

மொபைல் கோபுர வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களான, ‘இண்டஸ் டவர்ஸ் மற்றும்பார்தி இன்ப்ராடெல்’ ஆகியவற்றின் இணைப்புக்கு, தொலைதொடர்பு துறை அனுமதி வழங்கி இருக்கிறது.

இதையடுத்து, ‘வோடபோன் ஐடியா’ மூச்சு விடுவதற்கு வழி பிறந்து உள்ளது.இந்த இரு நிறுவனங்களின் இணைப்புக்கு, தொலைதொடர்பு துறை அனுமதி வழங்கி இருப்பதை அடுத்து, வோடபோன் ஐடியா நிறுவனம், அதன் வசம் இருக்கும், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, நிதி திரட்டிக்கொள்ளும்வாய்ப்பு உருவாகி இருக்கிறது.வோடபோன் ஐடியாவிடம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின், 11.15 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக, வோடபோன் ஐடியா, 4,500 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்கின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள்.

இரு நிறுவனங்களின்இணைப்புக்கு அனுமதி கிடைத்திருக்கும் நிலையில், ‘பார்தி இன்ப்ராடெல்’ நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம், நாளை அன்று கூடி, இணைப்பு பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளது.இந்த இணைப்பை அடுத்து, புதிய நிறுவனம் உருவாகும். புதிய நிறுவனத்தின் வசம் இருக்கும் மொபைல் கோபுரங்களின் எண்ணிக்கை, 1.63 லட்சமாக இருக்கும். உலகளவில், சீனாவுக்குஅடுத்து, மிகப்பெரும் எண்ணிக்கையிலான கோபுரங்கள் உள்ள நிறுவனமாகவும் உயரும்.