வி ஐ டிக்கு மத்திய அரசாங்கம் ” சீர்மிகு நிறுவனம் ” அங்கீகாரம் வழங்கியுள்ளது !

வி ஐ டிக்கு மத்திய அரசாங்கம் ” சீர்மிகு நிறுவனம் ” அங்கீகாரம் வழங்கியுள்ளது – சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் ஆராய்ச்சியில் இணைந்து வி ஐ டி உலக தரவரிசை பட்டியலில் முன்னேறும்.

வி ஐ டி க்கு மத்திய அரசாங்கம் ” சீர்மிகு நிறுவனம் ” அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய அரசு தேர்வு செய்யப்பட்ட தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ” சீர்மிகு நிறுவன ” அங்கீகாரம் வழங்கியுள்ளது . இதனால் அந்தந்த கல்வி நிறுவனங்கள் தரமான முயற்சிகளை எடுத்து கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு உலக அளவில் ( கல்வி நிறுவனங்கள் ) தரவரிசை பட்டியலில் இடம் பெற வாய்ப்புள்ளது.
வி ஐ டி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் கூறுகையில் இன்னும் 3 வருடங்களில் உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில் வி ஐ டி இடம் பெற போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
என்றார். ஏற்கனவே வி ஐ டி முதல் 550 தரவரிசை பட்டியலில் 3 பிரிவுகளில் (கணிணி மற்றும் தொழில்நுட்பம், வேதியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் ) இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வி ஐ டி க்கு கிடைத்த “சீர்மிகு நிறுவனம் ” அங்கீகாரம் தேசிய மற்றும் சர்வதேச சமுதாயத்திற்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் புதுமையான திட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த தேவையான சுதந்திரத்தை விஐடிக்கு வழங்கும். விஐடி அதிக செயல்திறனுடன் வேகமாக முன்னேற இது வழி வகுக்கும். இந்திய அரசின் “மேக் இன் இந்தியா” கனவு திட்டத்துடன் இணைந்துஉயர்தர ஆராய்ச்சியில் ஈடுபடவும், தொழில்களுக்கு உதவுவதற்கும், புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் வெளிநாடுகளில் உள்ள உயர் நிலை நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைக்க உதவும். ஆராய்ச்சி வெளியீடு, கல்வியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைகள் (பாடங்கள்), தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகள், கிராமங்களை தத்தெடுப்பதன் மூலம் சமூக பங்களிப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ஸ்டார்ஸ் திட்டத்தின் மூலம் இலவச கல்வி, ஆகியவை ” சீர்மிகு நிறுவனம் ” அங்கீகாரம் அடைய உதவியது.

வி ஐ டியில் படிக்கும் போதே வேலை வாய்ப்புகள்

கடந்த ஆண்டில் 719 தொழில் நிறுவனங்கள் விஐடி மாணவர்களுக்கு ட்ரீம் மற்றும் சூப்பர் ட்ரீம் ( Dream and Super Dream ) வேலைவாய்ப்புக்காக விஐடிக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது. ஆண்டுக்கு 5 இலட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு வழங்குவது ட்ரீம் ஆபர் எனவும் ( Dream Offer ) ஆண்டுக்கு 10 இலட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் அதற்குமேல் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை சூப்பர் ட்ரீம் ஆபர் ( Super Dream ) எனப்படும். தொழில் வல்லுநர்கள், வகுப்பு அறையில் உள்ள ஒவ்வொரு பாடங்களிலும் நடைமுறையில் உள்ள தலைப்புகள் பற்றிய விரிவுரைகளை வழங்கும் ஒரு அமைப்பும் விஐடியில் உள்ளது. இது 1500 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களை வளாகத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியத் தொழில்கள் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல புதுமையான இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளைத் தொடங்க விஐடி திட்டமிட்டுள்ளது. பின்வரும் பிரிவுகளிலும் படிப்புகள் உள்ளன. 1. செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence ).
2. தரவு அறிவியல் ( Data Science ).
3. இணைய இயற்பியல் அமைப்பு ( Cyber Physical Systems ).
4. தன்னாட்சி இயக்கம் (Autonomous Mobility ) . 5. அணியக்கூடிய தொழில்நுட்பம் ( Wearable Technology ).
6. ஸ்மார்ட் கட்டமைப்புகள்( Smart Structures ).
7. நிதி தொழில்நுட்பம்( Fin Technology)
8. நிலையான இணைய பாதுகாப்பு ( Sustainable Cyber Safety & Security )
9. புதிய பொருட்கள் தொழில்நுட்பம் ( New Materials Technology ). 10. மேம்பாட்டு பொருளாதாரம் ( Developmemt Ecinomics )போன்ற பல துறைகளில் கவனம் செலுத்தப்படும். வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வி ஐ டியின் முக்கிய திட்டங்கள்

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அதன் அனைத்து ஆராய்ச்சி முயற்சிகளிலும் வ்இ ஐ டி முக்கிய பங்கு வகிக்கும். தொழில் நுட்ப பூங்கா, உயர்கல்வி வசதிகள் பயிற்சி நிறுவனம், தனித்துவமான விற்பனை முன்மொழிவுகளுடன் ஆன்-லைன் கற்றல் மையம் , 2025ல் உலக சந்தை இடத்திற்கு இந்திய தொழிலாளர் தொகுப்பை உருவாக்குவதற்கான உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம், பல்வேறு நாடுகளின் பிரதிநிதித்துவங்களுடன் கூடிய பலதரப்புபட்ட சமூக மையம் அமைத்தல் போன்றவை விஐடியின் முக்கிய திட்டங்களில் உள்ளன.

டிஜிட்டல் தொழில்நுட்ப முறை

வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டு டிஜிட்டல் தொழில்நுட்பம் முழுமையாக கல்வி கற்பிப்பதில் பயப்படுத்தப்படும். 2025 ஆம் ஆண்டின் உயர் தொழில்நுட்ப டிஜிட்டல் உலகில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக அனைத்து மாணவர்களும் வடிவமைக்கப்படுவார்கள். உலக தரவரிசையில், முதல் 200 இடங்களுக்கு முன்னேற விஐடி போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். விஐடியின் மீதான நம்பிக்கைக்கு இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.நமது தேசத்தின் திறனை வளர்ப்பதற்கு விஐடி முக்கிய பங்கு வகிக்கும் என வி ஐ டி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் கூறினார்.

Related posts: