இந்திய வங்கி துறை சார்ந்த கவலைகளும், சந்தேகங்களும் தொடர்ந்து பங்கு சந்தையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, பொதுத் துறை வங்கிகள் சார்ந்த கவலைகள், சந்தையை கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் பாதித்ததை பார்த்தோம்.ஆனால், 2019ம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் நிலைமை ஒரளவு சரியாகி, அவர்களின் கவலைகள் ஒவ்வொன்றாக நீங்க ஆரம்பித்து விட்டன.மாறாக, பல முன்னணி தனியார் வங்கிகள் தங்கள் நிதி நிலையில் பெரும் சரிவையும், வாரா கடன் பெருக்கத்தையும் சந்தித்தன.ஆட்டம் கண்டுவிட்டன
இதே காலகட்டத்தில், தனியார் நிதி நிறுவனங்களும் பல சவால்களுக்கு ஆளாகி, நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டன. பல தனியார் வீட்டு கடன் நிறுவனங்களும் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, பெரிதும் ஆட்டம் கண்டுவிட்டன. அவர்கள் தொடர்ந்து இயங்குவதே கேள்விக்குறி ஆகியிருப்பதை நாம் கண்டோம்.பங்கு சந்தையில் பல தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் நிறுவன பங்குகள் பெரும் சரிவைக் கண்டன.அடுத்து, நடப்பது குறித்து கவலை கலந்த எதிர்பார்ப்புகள் சந்தையில் தெரிகின்றன.
முதலில், நிதி சிக்கல் சூழ்ந்து காணப்படும் தனியார் வங்கிகளை காப்பாற்ற புதிய முதலீட்டாளர்கள் முன் வர வேண்டும். தனியார் வீட்டு கடன் நிறுவனங்களின் பிரச்னைகள் மீண்டும் பொதுத் துறை வங்கிகளை பாதிக்கும் என்பதால், அவற்றை ரிசர்வ் வங்கியும், அரசும் உடனடியாக சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சூழலை அவை எப்படி அணுகப் போகின்றன என்பதில் அனைவருக்கும் ஆழ்ந்த கவலை இருக்கிறது.இந்த மூன்று வகை நிறுவனங்களும் தங்கள் நிதிநிலையை சீரமைக்க அதிக அவகாசம் இல்லாத சூழ்நிலையில் தவிக்கின்றன.தங்கள் வாராக் கடன்களை மீண்டும் வசூலிக்கவும், புதிய முதலீடுகளை மீண்டும் ஊக்குவிக்கவும், நல்ல வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த நிறுவனங்கள் அவசர முயற்சிகள் எடுத்து, அவற்றில் வெற்றியும் காண வேண்டும்.அவசியம்இதற்கு அரசின் ஒத்துழைப்பும், ரிசர்வ் வங்கியின் முழு ஆதரவும், முதலீட்டாளர்களின் ஆர்வமும், சந்தைக்கு இந்த நிறுவனங்களின் மீது போதுமான நம்பிக்கையும் மிக அவசியம்.பல முதலீட்டு முடிவுகள் வேகமாக எடுக்கப்பட்டு, அவை அனைத்து தரப்புகளின் ஆதரவை பெற்று, நிறுவனங்களுக்கு தேவையான அவசர நிதி திரட்டப்பட்டு, அவற்றின் மூலம் இந்த நிறுவனங்கள் மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள்.
நிறுவன தேவைகள் காலத்தோடு நிறைவேற்றப்பட வேண்டும்.இதை அனைவரும் உணர்ந்து நடந்தாலும், சரியான நேரத்தில்,காலத்தோடு தீர்வு அமைவது அனைவருக்கும் மிக அவசியம்.அடுத்து வரும் வாரங்களில் இந்த மூன்று வகையான நிறுவனங்களும் தங்கள் சிக்கல்களில் இருந்து மீண்டு, மறுபடியும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி, மீண்டும் முதலீட்டாளர்களின் மதிப்பை பெருவதற்கு ஆர்வமாக இருப்பார்கள். அவர்களின் முயற்சிகள் நிறைவேறி வெற்றி பெறுவது, அரசுக்கும் பொருளாதாரத்திற்கும் மிக அவசியம்.