வாட்ஸ்அப் செயலியின் புதிய அம்சங்கள் !

வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஒ.எஸ். பீட்டா பதிப்பில் டார்க் மோட் மற்றும் சில புதிய அம்சங்களை சோதனை செய்யப்படுகின்றன. விரைவில் இந்த அம்சங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஐ.ஒ.எஸ். 2.20.10.23 அப்டேட்டில் வாடிக்கையாளர்களுக்கு டார்க் மோட், லோ டேட்டா மோட் மற்றும் காண்டாக்ட்ஸ் இன்டகிரேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். ஐபோன் மொபைல் டேட்டாவில் இருக்கும் போது லோ டேட்டா மோட் மீடியா ஃபைல், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்டவை ஆட்டோ டவுன்லோடு ஆவதை தடுத்து நிறுத்தும்.

வைபை இல்லாத சமயங்களில் மொபைல் டேட்டா பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அமசம் ஐபோன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கிறது. இதனை இயக்க செட்டிங்ஸ் — செல்லுலார் — செல்லுலார் டேட்டா ஆப்ஷன் — லோ டேட்டா மோட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த அம்சம் ஐபோனில் இருந்து டாக்யூமென்ட் அல்லது ஏதேனும் மீடியா ஃபைல்களை பகிரும் போது, வாட்ஸ்அப் காண்டாக்ட், க்ரூப்கள், ஏர் டிராப் மற்றும் மெயில் ஆப்ஷன்கள் போன்றவை பரிந்துரைக்கப்படும். புதிய ஐ.ஒ.எஸ். ஷேர் ஷீட் மூலம் மல்டிமீடியா தரவுகளை நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம்.