வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும்!

நாடு முழுவதும் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் அமலாகி உள்ள நிலையில், இச்சட்டம் தமிழகத்தில் முதலில் நடைமுறைக்கு வருவது கவனிக்கத்தக்கது.வாடகை வீட்டு சிக்கல்களை தீர்க்க உதவும் புதிய சட்டம்

தமிழக அளவில் 2011ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 24 சதவிகித மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசு கடந்த வருடம் வாடகை மசோதா சட்டத்தை நிறை வேற்றியது. அதுகுறித்த விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம், வாடகை தொடர்பான விதிமுறைகள், நடைமுறைகள் (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிப்ரவரி முன்றாம் வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

முந்தைய தமிழ்நாடு கட்டுமான வாடகை மற்றும் குத்தகை சட்டத்தின்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது அது மாற்றி அமைக்கப்பட்டு தமிழகத்தில் வீடு, அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு கட்டிட த்தையும் வாடகைக்கு விடப்படும்போது அதற்கான ஒப்பந்தம் பதிவு செய்யப்படு வதை அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.

அதற்காக துவக்கப்பட்டுள்ள www.tenancy.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் வாடகை ஒப்பந்தங்களை சம்பந்தப்பட்ட வாடகை அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த துணை ஆட்சியர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மூலம் நியமிக்கப்படு வார்கள். மேலும், இரு தரப்புக்கும் இடையே உருவாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, வருவாய் கோட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது, சென்னைக்கு 8 அதிகாரிகள் உள்ளனர்.

இந்த சட்டத்தின் கீழ் வாடகை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் இனி வாடகைக்கு விடப்படும் எந் த ஒரு கட்டிடத்துக்கும் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு அதை பதிவு செய்ய வேண் டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ள உரிமையாள ர்கள் தங்கள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய 90 நாட்கள் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

*வீட்டின் உரிமையாளர், குடியிருப்போர் இடையே ஒருமித்த கருத்தின் அடிப்படை யில் உருவாக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில், இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளப் பட்ட வாடகை விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
* வீட்டை வாடகைக்குவிடுபவர் மூன்று மாத வாடகையை மட்டுமே முன்பணமாகப் பெற வேண்டும்.
* வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர், குத்தகைதாரர் ஆகியோர் வாடகை ஒப்பந்தத்தில் உள்ளபடி வீட்டை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* வாடகைக்குக் குடியிருப்பவர், ஒப்பந்தக் காலம் முடிந்தபிறகு வீட்டைக் காலி செய்ய வில்லை என்ற நிலையில் இரு மடங்கு வாடகை தர வேண்டும்.
* வாடகை குறித்து சிக்கல்கள் எழும்போது வீட்டு உரிமையாளர் அல்லது வாடகை க்குக் குடியிருப்பவர், வாடகை அதிகாரியிடம் எழுத்து மூலம் தகவல் தர வேண்டும். அவர் 30 நாட்களுக்குள் பிரச்னைக்குத் தீர்வு காண்பார்.
*வாடகை அதிகாரி அளித்த தீர்வில் திருப்தியில்லை என்ற நிலையில் 90 நாட்களு க்குள், வாடகை தொடர்பான பிரச்சினைகளை விசாரிக்கும் நீதிமன்றத்திலும், அத னை அடுத்து 120 நாட்களில் வாடகை குறித்த பிரச்சினைகளை விசாரிக்கும் தீர்ப்பா யத்திலும் முறையிடலாம். இந்த அமைப்புகளின் தீர்ப்பினை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இயலாது.
* வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் நாடு முழுவதும் அமலாகி உள்ள நிலை யில், இச்சட்டம் தமிழகத்தில் முதலில் நடைமுறைக்கு வருவது கவனிக்கத்தக்கது

Related posts:

உலகில் அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடம் !
கோயில் நிலங்களில் வசிக்கும் 20 ஆயிரம் பேருக்கு பட்டா.?
சென்னை எல்.ஐ.சி யின் பங்குகளில் ஒரு பகுதி விற்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு !
ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிராமானிக் - ஐ கௌரவித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் !
நார்வேயில் மிதக்கும் சோலார் பேனல்.! செல்லூர் ராஜூக்கு தெரியாம போச்சு.!
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?
வயலின் வித்துவான் # டி.எஸ்.கிருஷ்ணா # இன்னிசை # நிகழ்ச்சி
நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ - கவிதைத் தொகுதி !