வவ்வாலுக்கும் கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை?

ஆய்வை நடத்திய புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் விஞ்ஞானி பிரக்யா டி யாதவ் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிடெரோபஸ் வவ்வால் மற்றும் ரூசெட்டஸ் வவ்வால் வகைகளை ஆராய்ந்தோம். அவற்றின் தொண்டை மற்றும் மலக்குடல் மாதிரிகளை எடுத்து ஆராயப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் காணப்படுகிற “வவ்வால் கொரோனா” வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

அதாவது, “வவ்வால் கொரோனா” வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு காரணமான சார்ஸ்-கோவ் 2 வைரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் ஆய்வில் 2 வகையான வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” வைரசை காண முடிந்தது; தொற்று நோயுடன் வருகிற வைரஸ்களை அடையாளம் கண்டறிவதற்கு தொடர்ச்சியான, தீவிரமான கண்காணிப்பு தேவை. இவ்வாறு அவர் கூறினார்.