வர்மக்கலை மருத்துவத்தின் மகத்துவம்..! வர்மக்கலை ஆசான் பாமோ வெங்கடேசன் !

நம்மில் பலரும் பல வகையான நோய்களுக்காக பல மருத்துவரை சந்தித்துகொண்டுதான் இருக்கிறோம், ஆனாலும் நோய் மட்டும் குணமான பாடில்லை..

முதலில் நோய் என்றால் என்ன? நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் கூட்டுக்கலைவையே நம் உடல் ஆகும், இதில் ஏதாவது ஒரு பூதத்தின் சக்தி குறையும் போது நம் உடல் நோயுறும்.உதாரணமாக நீர் சக்தி குறையும் போது, சிறுநீரக கல், ஹார்மோன், மூட்டுவலி, முதுகுத்தண்டு பிரச்சனை, பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.நோய் என்பது இரு காரணங்களால் ஏற்படலாம்.பரு உடலில் ஏற்படும் நோய்.பிராண உடலில் ஏற்படும் சக்தி குறைவால் ஏற்படும் நோய்.

வர்மக்கலை தத்துவப்படி நமக்கு பரு உடல் மற்றும் பிராண உடல் ஆகிய இரு உடல் உள்ளது,
பிராண உடலில் ஏற்படும் சக்தி குறைபாடானது நம் பரு உடலில் நோயாக பிரதிபலிக்கிறது.
மற்றும்,உணவுமுறை மாற்றத்தால் பரு உடலில் நோய் ஏற்பட்டு அது பிராண உடலில் சக்தி குறைவை உண்டாக்கும்.

ஆங்கில மருத்துவத்தில் நம் உடலுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பல சமயங்களில் நம்மில் பலரது உடலில் கடுமையான வலி அல்லது வேறு பிரச்சனைகள் இருப்பதை நாம் உணர்வோம், ஆனால் வலி உள்ள இடத்தை “ஸ்கேன்” செய்து பார்த்தாலோ, வேறு பல சோதனைகளை செய்து பார்த்தாலும் நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்காது, டெஸ்ட் ரிப்போர்ட்டிலும் “நார்மல்” என்ற முடிவுதான் கிடைக்கும்..வேறு வேறு வகையான சோதனைகளை செய்ய சொல்லி ஆங்கில மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுவோம், இந்த சோதனைகளுக்காக பல ஆயிரம், லட்சம் என செலவளித்த பின்பும் என்ன நோய் என்பதை கண்டுபிடிக்க முடியாமலே பலரும் தவித்து வருகின்றனர்.நம் பரு உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் மட்டுமே சோதனைகளில் தெரியவரும், பிராண உடலில் ஏற்பட்ட பிரச்சனைகளை ஆங்கில மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் உண்மை.

இன்றைய சூழ்நிலையில் பலர் நரம்பு வலி, இடுப்பு வலி, முதுகுவலி, வயிற்றுவலி, கால்வலி, உடலின் வீக்கம், தலைவலி, பக்கவாதம் மற்றும் ஆட்டிசம் ஆகிய பிரச்சனைகளின் காரணம் கண்டறிய சோதனைகளுக்காக பணத்தை இழந்து வலி மற்றும் வேதனையுடன் காலம் கடத்தி வருகின்றனர்.சரி, இது போன்ற பிரச்சனைகள் உள்ள நபருக்கு என்ன தான் தீர்வு?இந்த கேள்விக்கு வர்மக்கலை மருத்துவத்தில் பதில் உள்ளது.வர்மக்கலை சிகிச்சையின் மூலம் பிராண உடலில் உள்ள சக்தி குறைபாட்டை சமன் படுத்த முடியும்.சொல்லப்போனால் வர்மக்கலை சிகிச்சை என்பதே பிராண உடலுக்கு செய்யப்படும் சிகிச்சை தான் என்றால் அது மிகையாகாது..

நம் உடலில் மூன்று முக்கியமான காரணங்களால் நோய் உண்டாகிறது.

1- இரத்தத்தில் உள்ள பிரச்சினை.
2- நீர்மத்தில் உள்ள பிரச்சினை.
3- ரத்த ( சக்தி )ஓட்டத்தில் ஏற்படும் பிரச்சினை.

இரத்தம், நீர்மம், சக்தி இவை மூன்றில் ஏற்படும் “பற்றாக்குறை” அல்லது “உபரி” இவற்றின் காரணமாகவே நோய்கள் உருவாகிறது.

ஒருவரின் நோய் என்பது இரத்தம், நீர்மம், சக்தி, ஆகியவற்றின் பற்றாக்குறையால் எற்பட்டதா, அல்லது உபரியால் ஏற்பட்டதா? என்பதை நோயின் அறிகுறிகள் மூலமும் நாடிப்பரிசோதனை மூலமும் துள்ளியமாக கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும், இப்படி சிகிச்சை செய்தால் நோய்கள் பரிபூரணமாக குணமாகும்..

மருத்துவர்களால் கைவிடப்பட்ட பலர் வர்மக்கலை சிகிச்சையால் குனமாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

●கழுத்து வலி,
●தோள்பட்டை வலி,
●கை கால் வலி,
●மூட்டு வலி,
●பக்கவாதம்
●ஆட்டிசம்,
●முகவாதம்
●சிறுநீரக பிரச்சனை
●மைக்ரேன் தலைவலி,
●சைனஸ்,
●நரம்பு தளர்ச்சி,
●மனம் சார்ந்த பிரச்சனைகள்,
●காது இரைச்சல்.

போன்ற நாட்பட்ட பல நோய்களை வர்மக்கலை சிகிச்சை மூலம் குணமாக்க முடியும்.

தலைமை வர்மக்கலை ஆசான்
பாமோ வெங்கடேசன்
Master Of Kung fu & Varma
திருச்சி & சென்னை
Contact +91 9486660113