வருமானவரித்துறை தாக்கல் செய்வதற்கான முக்கிய அம்சங்கள்!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கால நீட்டிப்பு கிடையாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரித்துறை தாக்கல் செய்வதற்கான சில முக்கிய அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வருமான வரித்துறையின் முக்கிய அம்சங்கள்;-

1. நடப்பில் உள்ள வரி சட்டங்களின்படி, தனிநபர் வருமான வரி செலுத்துவோர் (இந்தியாவில் வசிப்பவர்கள் அதேபோல் உள்நாட்டில் வசிக்காதவர்கள்) ஆகியோர் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளனர். 1. 60 வயதுக்கு உள்பட்டவர்கள், 2. மூத்த குடிமக்கள் (60 முதல் 80 வயது வரை) 3. சூப்பர் சீனியர் சிட்டிசன்ஸ் (80 வயதுக்கு மேற்பட்டோர்).

2. முதல் பிரிவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இலலை. சீனியர் சிட்டிசன்ஸ் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரையில் இருந்தால் அவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சூப்பர் சீனியர் சிட்டிசன்ஸ் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையில் இருந்தால் அவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

3. வருமான வரித்துறை ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ‘இ-பைலிங்’ இணையதள வசதி
(incometaxindiaefilling.gov.in) செய்துள்ளது.

4. இணையதளத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் தங்களது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (பான்) வருமான வரி துறையின் இ-பைலிங் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பான் எண் இல்லாதவர்கள், அதற்கு பதிலாக ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். (ஆதார் எண், பான் எண் ஆகியவற்றில் எதையாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.)

5. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 7 வகையான விண்ணப்பங்கள் உள்ளன. அவை: ஐடிஆர்-1, ஐடிஆர்-2, ஐடிஆர்-3, ஐடிஆர்-4, ஐடிஆர்-5, ஐடிஆர்-6, ஐடிஆர்-7.

6. இந்த முறை ஐடிஆர் விண்ணப்பங்கள் முன்கூட்டியே பூர்த்தி செய்யப்பட்ட வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களில் வருமானம், வருமான வரி செலுத்துவோர் செலுத்திய வரி, இந்த விவரங்களை வருமான வரித்துறை பிற ஏஜென்சிகளான வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கிரடிட் கார்டு கம்பெனிகள் ஆகியவற்றிடம் இருந்து பெற்றவை. வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை அறிவுறுத்துவத் என்னவென்றால், “விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை கவனமாக சரிபாருங்கள், முன்கூட்டியே பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களில் வருமான வரி செலுத்துவதற்கான வருமானம் ஏதாவது விடுபட்டுள்ளதா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

7. வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பின்னர் அதுபற்றி சரிபார்த்துக் கொள்ளுமாறு வருமான வரி சட்டங்கள் வலியுறுத்துகின்றன. ஐடிஆர் சரிபார்த்தலுக்கு வருமான வரித்துறை 5 வழிமுறைகளை தெரிவித்துள்ளது. ஆதார் ஓடிபி (ஒரு தடவை ரகசிய எண்) நடைமுறை. வங்கி ஏடிஎம்/வங்கி கணக்கு, டீமேட் கணக்கு, நெட் பேங்கிங் ஆகிய வசதிகள் உள்ளன.

8. வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான வரி கணக்கு தாக்கல் நிலவரத்தை இ-பைலிங் போர்டல் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியையும் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்த வேண்டும் என்றால் பான் எண் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்கான ஏற்பு கடித எண் ஆகியவை கட்டாயம் தேவை. ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு வருமான வரி துறையால் வழங்கப்படுவதான் ஏற்பு கடித எண்.

9. வருமான வரி செலுத்துவோர், குறிப்பிட்ட தேகிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு பின்னால் காலதாமதமாக தாக்கல் செய்தால் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.

10. காலதாமதமாக தாக்கல் செய்வதற்கான அபராதத் தொகையை, காலதாமதற்கான காரணத்தை அறிந்து அதற்கு ஏற்ப வருமான வரித்துறை அபராதம் விதிக்கும்