பணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப பேடிஎம், கூகிள், போன்பே ஆகிய நிறுவனங்கள் சமானியர்களும் பயன்படுத்தும் எளிய வகையான பணப் பரிமாற்ற தளத்தை உருவாக்கியுள்ளது. UPI மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்த BHIM செயலி வாயிலான பரிமாற்றங்கள் குறைந்துள்ளது.
NPCI அமைப்பு NPCI அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஜனவரி மாதம் மட்டும் யூபிஐ தளத்தின் வாயிலாகப் பேடிஎம் நிறுவனம் சுமார் 221 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது, இதைத் தொடர்ந்து கூகிள் பே மற்றும் போன் பே ஆகிய நிறுவனங்கள் தலா 220 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது.
போன்பே இதுகுறித்துப் போன்பே கூறுகையில் ஜனவரி மாதம் சுமார் 225 மில்லியன் பேமெண்ட்களின் வாயிலாகச் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் என்சிபிஐ அமைப்பு 220 மில்லியன் பணப் பரிமாற்றங்களை மட்டுமே செய்துள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. யூபிஐ பரிமாற்றங்கள் இப்படி ஜனவரி மாதம் யூபிஐ வாயிலாக மொத்தம் 672 மில்லியன் பேமெண்ட்களைச் செய்யப்பட்டுள்ளது, இதுவே டிசம்பர் மாதம் 620 மில்லியன் பேமெண்ட்கள் மட்டுமே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. BHIM செயலியின் நிலை இதுவே BHIM செயலியின் வாயிலாக வெறும் 13.9 மில்லியன் பரிமாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, இது டிசம்பர் மாதத்தில் இதன் எண்ணிக்கை 17.06 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் என்னதான் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்தாலும் தனிநபர் – தனிநபர் இடையிலான பரிமாற்றங்களே அதிகரித்து வருகிறது. வணிகர்கள் மத்தியிலான பரிமாற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். வணிகப் பணப் பரிமாற்றம் ஜனவரி மாதம் செய்யப்பட்ட மொத்த 672 யூபிஐ பரிமாற்றங்களில் வெறும் 100-120 மில்லியன் பரிமாற்றங்கள் மட்டுமே தனிநபர் – வணிகர்கள் மற்றும் வணிகர்கள்- வணிகர்கள் இடையில் நடந்துள்ளது.