சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா சொகுசு கார்களுக்கான ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம்!

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா, இந்திய சொகுசு கார் சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது: சென்னையில் இந்நிறுவனம் சொகுசு கார்களுக்கான மிகப் பெரிய ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது!

சொகுசு கார் பிராண்டில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10,000 சொகுசு கார்களை உற்பத்தி செய்த ஒரே நிறுவனம் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.மெர்சிடிஸ் பென்ஸ் – சுந்தரம் மோட்டார்ஸ் தற்போது தமிழ்நாட்டில் மிகப் பெரிய 3 எஸ் டீலர்ஷிப் [3S luxury car dealerships] நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.சுமார் 72 ஆயிரம் சதர அடி பரப்பளவில், மிகவும் விசாலமாக அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது | திறன் பயிற்சி பெற்ற 136 ஊழியர்கள் | 6 கார் பார்வைப்பகுதிகள் (car display) 63 சேவை தளங்கள் (service bays) | இந்த டீலர்ஷிப் 5 மாத காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது | ஆண்டுக்கு 15 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்யும் ஆற்றல், வசதிகளைக் கொண்டது.அதிநவீன 3 எஸ் வசதிகள் ஆட்டோமொபைல் மையமான சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மிக எளிதில் அணுகக்கூடிய முக்கிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இன்றைய நவீன சொகுசுத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த டீலர்ஷிப் நிலையத்தின் உட்புற அலங்கார வடிவமைப்பை மிக அழகியலுடன் வடிவமைத்துள்ளது.எம்பி டிஜிட்டல் சைனேஜ் சிஸ்டம் (MB DIGITAL SIGNAGE) வசதி இங்கு உள்ளது: இந்த ஷோரூமின் உட்பகுதி அலங்கார வடிவமைப்புகள் பாரம்பரிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஷோரூம் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் உள்ளூர் தொடர்பான முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் எடுத்துரைக்கிறது. வாடிக்கையாளர்களின் அனுபவம் தடைகள் இல்லாமல் சீரானதாக, இருக்கும் வகையில் ப்ரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு முனையமும் மதிப்புமிகு வாடிக்கையாளர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும்.

புதிய சொகுசு கார்கள் வாங்குவதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரே தளமாக இது அமைந்துள்ளது. புதிய கார்கள் விற்பனை, நிதி மற்றும் காப்பீடு [F&I], வர்த்தகம்[Trade-in], எம்பி சான்று பெற்ற கார்கள்[MB certified cars], அலங்காரப் பயன்பாட்டு இணைப்புகள் [accessories], சிறு நிலையங்கள் [boutiques], பிரீமியர் எக்ஸ்பிரஸ் பே [premiere express bay], குறிப்பிட்ட கால முறை பராமரிப்பு [periodic maintenance], பொது பழுது பார்த்தல் [general repairs], பழுது கண்டறிதல் பணிகள் [diagnosis jobs], எம்பி கார் கேர் [MB car care], உள்ளிட்ட அனைத்தும் இங்கும் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர பாடி மற்றும் பெயிண்டிங் பணிகளும் [body and paint jobs] மேற்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு மிக நவீன வசதிகளை, அதிக செளகரியங்களுடன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதற்காக நவீன டிஜிட்டல் முறையில் இந்த டீலர்ஷிப் நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன் அனுமதி பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் சர்வீஸ் டிரைவ் (Digital Service Drive (DSD) உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆர்வலர்களுக்கு கலந்துரையாடல் டிஜிட்டல் டச் டேபிள் [Interactive digital touch-table] மற்றும் காணொலிகளை திரையிடும் சுவர்கள் சிறப்பான அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமக்கப்பட்டுள்ளது.தென் இந்தியா முழுவதும் 9 ஷோரூம்கள் மூலம் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் மெர்சிடிஸ் பென்ஸ் வலுவான தொடர் செயல்பாடு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது 47 நகரங்களில் 97 ஷோரூம்களை கொண்டுள்ளது/

இந்தியாவின் மிகப் பெரிய சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், சென்னையின் மிகப் பெரிய கார் டீலர்ஷிப் நிறுவனங்களில் ஒன்றாக ‘சுந்தரம் மோட்டார்ஸ் [Sundaram Motors] ’-ஐ தொடங்கியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மார்ட்டின் ஸ்வெங்க் [Mercedes-Benz India Managing Director and CEO Martin Schwenk] மற்றும் சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சரத் விஜயராகவன் [Sundaram Motors Executive Director Sharath Vijayaraghavan] ஆகியோர் இருவரும் இணைந்து இந்த டீலர்ஷிப் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தனர்.

சொகுசு கார் பிரிவை வளர்ச்சி அடையச் செய்து முக்கிய பெருநகரங்களில் அதிக வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை இதன் மூலம் மெர்சிடிஸ் – பென்ஸ் மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்த அதி நவீன சொகுசு டீலர்ஷிப் ஷோரூம் பெரிய அளவில் 72 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், மிக விசாலமாக பரந்து விரிந்துள்ளது. 6 கார் டிஸ்பிளே மற்றும் 63 சர்வீஸ் பே-களுடன் உள்ள இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்ய முடியும். இது இந்திய சந்தையில் மெர்சிடிஸ் – பென்ஸ் நிறுவனத்தின் உத்வேகமான அணுகுமுறையை, அதன் வளர்ச்சியை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நகரத்தின் வாகன மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த டீலர்ஷிப் ஷோரும், 3 எஸ் (sales, service & spares – விற்பனை, சேவை, உதிரிபாகங்கள்) முறையில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் அளிக்கிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை ஒரே தளத்தில் பூர்த்தி செய்யும் வசதிகளை கொண்ட டீலர்ஷிப்பாக இது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மார்டின் ஸ்வெங்க் கூறுகையில், மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியச் சந்தையில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் வகையில் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. இதனால் மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் பெறுவதோடு, அவர்களும் எங்களது பிராண்டுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மெர்சிடிஸ் – பென்ஸ் சென்னையில் வலுவான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. தற்போது, சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் எங்களது சந்தை செயல்பாடுகளை மேலும் வலுவாக்க உள்ளது. சென்னை நகரம் எங்களது முக்கிய சந்தையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. எங்களது விற்பனையில் சென்னை முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட அணுகுமுறை, நுட்பமான வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தயாரிப்புகளை வழங்குதல், சிறந்த சேவை, மற்றும் ஈடு இணை இல்லாத சொகுசுகார் வைத்திருக்கும் உரிமையாளர் அனுபவம் ஆகியவற்றை தொடர்ந்து எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.” என்றார்.

சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சரத்விஜயராகவன் கூறுகையில், “மெர்சிடிஸ் -பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது வாகனச்சந்தை செயல்பாடுகளை முக்கியமான சந்தையான சென்னையில் அதிகரிக்க இந்த முயற்சி உதவும். மெர்சிடிஸ் – பென்ஸ் நிறுவனத்துடன் நீண்டகாலமாக இணைந்து செயல்படும் நிறுவனம் என்ற வகையில் இந்த சந்தை மற்றும் அருகில் உள்ள இடங்களில் செயல்பாட்டை விரிவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மிக உயர்ந்த தரத்திலான தயாரிப்புகளையும், ஈடு இணையற்ற வாகன உரிமையாளர் அனுபவத்தையும் வழங்க வேண்டும் என்பது சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நோக்கமாகும். இந்த புதிய டீலர்ஷிப்பை எங்களது மேலான வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். சென்னையின் மிகப் பெரிய இந்த’3 எஸ்’ஒருங்கிணைந்த சொகுசுகார் டீலர்ஷிப் ஷோரூம் திறக்கப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்கள் மற்றும் மெர்சிடிஸ் – பென்ஸ் நிறுவனத்துடனான எங்களது வலுவான பிணைப்பை எடுத்துரைக்கிறது.” என்றார்.