முகநூலை பின்னுக்குத் தள்ளிய டிக்டாக்!

சர்வதேச அளவில் முகநூலை பின்னுக்குத் தள்ளி, 70 கோடி பேரால் பயன்படுத்தப்படும் செயலியாக டிக் டாக் முன்னேறியுள்ளது.சோஷியல் மீடியாவில் ஃபேஸ்புக் புரட்சி செய்தது என்றால், டிக்டாக் வேறுவிதமான புரட்சியை செய்தது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் செயலி மூலம் பதிவுகள் வெளியிடுவது அதிகரித்துள்ளது. இதனால் பிரபல சோஷியல் மீடியா தளங்கள் கொஞ்சம் ஆடித்தான் போயின. டிக்டாக் செயலிக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனம் களமிறக்கிய லஸ்ஸோ என்ற செயலி இளைஞர்கள் மத்தியில் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

இந்நிலையில் உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் செயலிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, அதிகபட்சமாக 85 கோடி பேர் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் அப் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் 4 ஆவது காலாண்டான, அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் மட்டும் 39 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 70 கோடி பேரால் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் டிக் டாக் செயலி, இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

மெசஞ்சர், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவை, இந்தப் பட்டியலின் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தச் செயலிகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது டிக் டாக். இந்தியாவில் டிக் டாக் செயலியை 45 சதவிகிதம் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், டிக் டாக் செயலி தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் ஸ்மார்ட் ஃபோனை எளிதில் ஹேக் செய்து தகவல்களை திருட முடியும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.