மாற்றுத் திறனாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் !

மாற்றுத் திறனாளர்களுக்கான மாபெரும் பல்நோக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 150வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு , தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கமும் , சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை , ராகாஸ் பல் மருத்துவமனை , ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவசங்கத்துடன் இணைந்து, மாற்றுத் திறனாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு , மாபெரும் பல்நோக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் ,ஆற்காடு சாலையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமினை, பெருநகர சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவின் உதவி ஆணையர் முனைவர் ச.செல்வக்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு , முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வுச் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆவின் கி.கோபிநாத் பேசும்போது:மாற்றுத்திறனாளர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, ராகாஸ்பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தி தந்தார்கள் என்றார்.மேலும் , இம்முகாமில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க தலைவர் ஆடிட்டர் வர தாக்குட்டி, மேனேஜிங் டிரஸ்டி Dr.அருண்குமார், ராமச்சந்திரா மருத்துவமனை மெடிக்கல் சூப்பரின்ட் டண்ட் ஜம்பு, Dr.எம் ஜி ஆர் காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளி முதல்வர் பேராசிரியர். முனைவர் லதா ராஜேந்திரன் மற்றும் Dr.பாலாஜி சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts:

இந்தியாவில் சோனி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் !
குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...
சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் தனது பயணவர்த்தக செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியுள்ளது.!
இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்றது ! தலைமை தேர்தல் அதிகாரி !
சென்னையில் ரூ.100 கோடி மதிப்பிலான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை !
ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!
சென்னை எல்.ஐ.சி யின் பங்குகளில் ஒரு பகுதி விற்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு !
பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனத் தொழிலதிபர்களுக்கு விசா தேவையில்லை !