மல்டி மீடியா மாணவர்களுக்கு மவுசு! படித்து கொண்டிருக்கும் போதே வேலை!!

எஞ்சினியரிங் உள்பட பல பெரிய படிப்புகளை படித்து விட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் நிலையில், மல்டிமீடியா மாணவர்களுக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே வேலைவாய்ப்பு அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வருகின்றது

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மல்டிமீடியா மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய அமேசான் உள்பட பெரிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அடுத்த மாதம் வரவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.அமேசான், டிசிஎஸ் போன்ற பெரிய கம்பெனிகளுக்கு மல்டிமீடியா மாணவர்கள், குறிப்பாக டிசைனிங் மாணவர்கள் அதிக அளவில் தேவைப்படுவதாகவும் அதனால் அந்த வேலைக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதிநேர ஊழியராக சேர்த்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ ஒன்றை அடுத்த மாதம் நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து மல்டிமீடியா மாணவர்களுக்கு மவுசு அதிகரித்து உள்ளதால் அந்த படிப்பை படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் கொள்கின்றனர். மல்டிமீடியா படிப்பிற்கு கொஞ்சம் அதிகம் செலவானாலும் படித்து முடித்தவுடன் அல்லது படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்பு என்பதால் இந்த படிப்பை மாணவர்களும் பெற்றோர்களும் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது