மருந்து விற்பனையில் முறைகேடு…? அமெரிக்காவில் 40 மில்லியன் டாலர் அபராதம் பெற்ற ரான்பாக்ஸி!!

இந்தியாவில் மருந்து உற்பத்தியில் முன்னோடியாக இருந்த ரான்பாக்ஸி நிறுவனம், ஏழை மக்களுக்கான மருத்துவ சேவை அளிக்கும் அமெரிக்க அரசின் டெக்சாஸ் மெடிக்எய்டு திட்டத்தில் செய்த முறைகேடுகள் மீதான வழக்கிற்கு 39.75 மில்லியன் டாலர் நஷ்டஈடாக கொடுக்க ஒப்புக்கொண்டது. வழக்கு டெக்சாஸ் மெடிக்எய்டு திட்டத்திற்கு அளிக்கும் மருந்துகளின் விலை நிர்ணயத்தில் சில முறைகேடுகள் செய்ததை தொடர்ந்து அமெரிக்கா அரசு வழக்கு தொடர்ந்தது. இந்தியாவில் செய்வது போல் அமெரிக்காவில் சித்து வேளைகளை எல்லாம் ஏமாற்றி விடலாம் என்று நினைத்த ரான்பாக்ஸி நிறுவனத்திற்கு அமெரிக்கா அரசு ஆப்பு வைத்தது. பணம் செலுத்துதல் இதற்கான பணத்தை ரான்பாக்ஸி 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தவணை முறையில் செலுத்துவதாக அனுமதி பெற்றுள்ளது. முறைக்கேடு மேலும் மெடிக்எய்டு அளித்த மருந்துகளில் முறைகேடு இருப்பாதால், இதற்கான பணம் அல்லது மருந்து பொருட்களை நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் அமெரிக்கவில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் எந்த வகையிலும் பாதிக்காது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சன் பார்மா தற்போது இந்நிறுவனத்தை சன் பார்மா நிறுவனம் முழுமையாக கைபற்றியுள்ளது,. இதன் மூலம் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்களில் 60 சதவீதம் இந்நிறுவனத்துடையது. மருந்து பாதுகாப்பு மேலும் கடந்த வருடம் அமெரிக்காவில் ரான்பாக்ஸி நிறுவனத்தின் மருந்து தரம் குறைவாக இருந்ததால் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு இந்நிறுவனத்தின் மீது சிவில் மற்றும் கிரிமினல் பிரிவில் சுமார் 500 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு மருந்து ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. இது என்ன கூத்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஆடைகள், உணவு பொருட்கள், தொழில்நுட்பங்கள் என அனைத்து பொருட்களுமே தரத்தில் உயர்வானதாக இருக்கும், இப்படி இருக்கும் போதே ரான்பாக்ஸி நிறுவனத்தின் மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு இன்று வரை ஒரு தடையோ, எதிர்ப்போ அளிக்கப்படவில்லை.

இதிலும் இந்நிறுனத்தின் சித்து வேலைகள் இருக்குமோ.. போன போகுது இந்தியனின் உயிர் தானே, நமக்கு பணம் தானே முக்கியம்… சிந்திக்க வேண்டும் மக்களே.