இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தனியாரை ஈர்க்க ஒப்பந்தம் ?

ஆயுஷ்மான் பாரத்’ என்ற, இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் ஈடுபடுத்த, ‘நாட்ஹெல்த்’ எனப்படும், இந்திய மருத்துவ சேவை கூட்டமைப்புடன், மத்திய அரசு அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.நாடு முழுவதும் உள்ள, ஏழை, எளிய மக்களுக்கு, தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும், இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம், கடந்தாண்டு, செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள,10 கோடி ஏழை எளிய குடும்பங்களுக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனை களில், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தோர், எவ்வித கட்டணமும் செலுத்தாமல், சிகிச்சை பெறலாம். மத்திய அரசின் புள்ளி விபரங்களின்படி, இதுவரை, 10 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த வும், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதனால், ‘நாட்ஹெல்த்’ எனப்படும், இந்திய மருத்துவ சேவை கூட்டமைப்புடன், மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை, நாட்ஹெல்த் அமைப்புவழங்கும்.

இந்த அமைப்பில் உள்ள, மருத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மருத்துவ சேவை அளிக்கும் நிறுவனங்கள் மூலம், இந்த உதவிகளை வழங்கு வதற்காக வழிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. மேலும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளும்,ஆயுஷ்மான் பாரத்திட்டத்தில் இணைவதற்கு, இந்த ஒப்பந்தம் வழி வகுத்துள்ளது.மருத்துவச் சிகிச்சைகளுக்கான சீரான கட்ட ணங்களை நிர்ணயிக்கும் பணியில், தேசிய மருத்துவ ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில், இந்த புதிய ஒப்பந்தம் கையெழுத் தாகி உள்ளது, முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு வகையான மருத் துவ சிகிச்சைக்கும் எவ்வளவு கட்டணம் நிர்ணயிப்பது என்பதற்கான ஆலோசனை களையும், நாட்ஹெல்த் அமைப்பு வழங்க உள்ளது.