மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ? எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி ?

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி.
* கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை.
* மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி.
* தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்.
* பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்.
* ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்.
* கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்.
* அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை.
* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி.
* 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்
* ஊரகப் பகுதியில் தொழில் நிறுவனங்கள் இயங்கலாம்.
* ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்.
* ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
* லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி.
* நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி.
* தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை.
* பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்.
* 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது/
* பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.
* எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.

Related posts:

விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், 'கொரோனா' முகாம்களாக மாற்றம்?

பெண்கள் சொத்துக்கு வரி விலக்கு?

உலகின் அதிநவீன ஹெல்மெட்டை தயாரித்த இந்திய நிறுவனம்

என்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக பதிலடி கொடுக்கிறேன் !ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்பேச்சு!

இனி நிலத்தடி நீரை பயன்படுத்தினாலும் கட்டணம் ..! மோடி அரசின் அடுத்த தாக்குதல்…!!

குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...

இன்னொரு பயங்கரத்தை நோக்கி அமெரிக்கா ? எகிறும் வேலையிழப்புகள் ?

பொருளாதார மந்த நிலை காரணமாக, தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் ?