போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு !

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான, போக்ஸ்வேகன் குழுமம், அதன் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிறுவனமாக மாற்றப் போவதாகவும், புதிய நிறுவனம், ‘ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா’ என, அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும், இந்த இணைப்பு மற்றும் புதிய நிறுவனம் சம்பந்தமான அனைத்து அனுமதிகளையும், ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.‘போக்ஸ்வேகன் இந்தியா, போக்ஸ்வேகன் குழுமம் விற்பனை இந்தியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா’ ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைகின்றன.தற்போது உள்நாட்டு சந்தையில் மிகக்குறைந்த பங்களிப்புடன் இருக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம், தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த மூன்று கார் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் முடிவை எடுத்துள்ளது.

இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக குர்பிரதாப் போபராய் இருப்பார். போபராய், தற்போது போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.’இந்தியா 2.0’ எனும், 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தின்படி, இந்த இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன் மூலம், 2025ல் சந்தையில், 5 சதவீத பங்கை கைப்பற்ற, இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. தற்போது இது, 2 சதவீதமாக உள்ளது.