இந்தியாவில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரியை உற்பத்தி செய்ய மத்திய அரசு முறைகேடாக வழங்கிய 204 உரிமங்களை சுப்ரீம் கோட் ரத்து செய்தது. இதனால் பொதுத்துறை வங்கிகள் சுமார் 96,484 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என மத்திய நிதியியல் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
உரிமம் ரத்து கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் இந்தியாவில் 1993ஆம் ஆண்டும் முதல் ஒதுக்கப்பட்ட சுமார் 204 நிலக்கரி சுரங்க உற்பத்தியில் முறைகேடுகள் உள்ளதை கண்டறிந்து அனைத்து உரிமங்களையும் ரத்து செய்தது. இதனால் இந்திய மின் உற்பத்தியில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மார்ச் 31 இந்தியாவில் மின்சார உற்பத்தி பாதிக்காத வண்ணம் நிதிமன்றம் 2015ஆம் ஆண்டு மார்ச் 31 வரை உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் உற்பத்தி செய்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகளுக்கு தலைவலி… இந்நிலையில் உரிமம் ரத்து செய்த சில நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் நிலக்கரியை மையமாக வைத்து இயங்கக்கூடிய மின்சார உற்பத்தி நிலையத்தை அமைக்கவும், விரிவுப்படுத்தவும் கடன்களை அளித்துள்ளது. இத்தொகை தற்போது 96,484 கோடி ரூபாயாக உள்ளது. இக்கடன் தற்போது வரக்கடன் அல்லது அபத்து கடன்களாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என மத்திய நிதியியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் சின்ஹா கூறுகையில் இந்திய மின்சாரத்துறைக்கு இதுவரை பொதுத்துறை வங்கிகள் சுமார் 5,82,469 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது என அவர் தெரிவித்தார்.மறு ஏலம் மேலும் ரத்து செய்யப்பட்ட 204 சுரங்க உரிமங்களுக்கு கடந்த மாதம் மறுஏலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மின்னணு முறையில் முதல் 74 சுரங்கங்களுக்கான ஏலத்தை பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளது.