பேட்டரி கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு ! தமிழக அமைச்சரவை ஒப்புதல் !!

இந்தியாவில் இரண்டாவதுபெரியகார் தயாரிப்பு நிறுவனமானத் திகழும் ஹூண்டாய் நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆலை தற்போது இருங்காட்டுக் கோட்டையில் செயல்படுகிறது. இந்த ஆலையின் விரிவாக்கம் மற்றும் பேட்டரி கார் தயாரிப்புக்கு ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேட்டரி கார் தயாரிப்பு திட்டத்துக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுச் சூழலை பாதிக்காத வாகனங்கள் தயாரிப்புக்கு ஊக்கத் தொகை அளிக்கும் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் இந்த முதலீட்டுக்கு சலுகைகள் கிடைக்கும். இந்த விரிவாக்க நடவடிக்கை மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
ஏற்கெனவே உற்பத்தியாகும் கார்களின் எண்ணிக்கையை மேலும் ஒரு லட்சமாக உயர்த்தவும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது