பேடிஎம், போன் பே கணக்குகள் முடக்க ரிசர்வ் வங்கி புதிய சட்டம்

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள் பலர் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற மொபைல் ஆன்லைன் பணம் செலுத்தும் அப்ளிகேசன்களையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்லைன் ஆப் மூலம் பணம் செலுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் நாளுக்குநாள் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களை கவர பேமண்ட் ஆப்களும் புதிய புதிய சலுகைகளை வழங்கி வருகின்றன. பேடிஎம் நிறுவனம் தனது செயலியில் உள்ள பேடிஎம் மால் எனப்படும் பகுதியில் ஆஃபர்களில் பொருட்களை தருகிறார்கள். போன்பே போன்ற நிறுவனங்கள் தங்களோடு இணைப்பில் இருக்கும் கடைகளில் பொருள் வாங்கிவிட்டு போன்பே மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. கூகுள்பே ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் குறிப்பிட்ட அளவு பணத்தை கேஷ்பேக் ஆக வழங்குகிறது. தற்போது மேற்கண்ட வகையான வசதிகளை பல ஆன்லைன் பணபரிவர்த்தனை ஆப்களும் வழங்கி வருகின்றன.

இப்படி பணப்பரிவர்த்தனைகளுக்கு உதவும் இந்த ஆப்கள் வால்ட்களையும் வைத்திருக்கின்றன. நமது வங்கியிலிருந்து மற்றொருவர் வங்கிக்கு பணம் அனுப்ப யூபிஐ (UPI) வசதி மட்டுமே போதுமானது. மொபைல் எண் மூலம் யூபிஐ பதிவு செய்துவிட்டால் எந்த வங்கி கனக்கையும் எந்தவொரு பேமண்ட் ஆப்களோடும் இணைத்து பணம் செலுத்த முடியும். இதிலே பேமண்ட் ஆப்கள் ஒரு இடைத்தரகரை போலவே செயல்படும்.ஆனால் பேமண்ட் ஆப்களில் உள்ள வாலட்களில் பணம் செலுத்துவது அல்லது வாலட்டில் உள்ள பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவது போன்ற பரிவர்த்தனைகளுக்கு KYC பதிவு கட்டாயம் என கூறியிருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.

KYC – Know Your Customer என்ற இந்த பதிவுப்படுத்துதலின் மூலம் பேமண்ட் வங்கிகள் வாடிக்கையாளரின் ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சரிபார்த்து அவர்களை இணைக்க வேண்டும். பேமண்ட் ஆப் வாலட் மூலம் முறையற்ற பண பரிவர்த்தனைகள் நிகழ்வதை தடுக்கவே இந்த புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பிட் காயின் எனப்படும் டிஜிட்டல் காயின்கள் பல நாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக பேமண்ட் வாலட்டுகள் மூலம் வங்கி கணக்குகளுக்கு பரிமாறப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

சில பேமண்ட் ஆப்கள் கூட தள்ளுபடி தொகை, ரீசார், பொருட்கள் வாங்கியதற்கான கேஷ்பேக் தொகை ஆகியவற்றை தங்களுடைய வாலட்களில் கொடுத்து விடுகின்றன. அதை வங்கி கணக்குக்கு மாற்றி கொள்ளலாம் அல்லது அப்படியே வேறு எதற்காவது பயன்படுத்தி கொள்ளலாம். இதனால் ஒரு சராசரி நபர் வங்கியின் மூலம் பரிமாறும் பண விவரம் தவிர, இதுபோன்ற வாலட்களில் பறிமாறப்படும் பண விவரங்கள் கணக்கில் வராமலே போய்விடுகிறது என்பதும் காரணமாக சொல்லப்படுகிறது.

எனவே ஆன்லைன் மூலம் பெறப்படும் சலுகை தொகைகளும் கூட கணக்கில் காட்டப்பட வேண்டும் என்பதற்காகவே வால்ட்களில் ஆவணங்களை இணைக்க நிர்பந்திக்கிறது. ஆதார் கார்டு, வாக்காளர் உரிமை அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதாவது ஒன்றை சரிப்பார்த்து வாலட் இணைப்பை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பேமண்ட் ஆப் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றன. பேடிஎம் முக்கியமான நகரங்களில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஆவணங்கள் சரிபார்ப்பு செயல்முறையை நடைமுறைப்படுத்தி உள்ளன. பேமண்ட் ஆப்கள் ஆன்லைனில் செயல்படுபவை என்பதாலும் மாகாண வாரியாக பணியாட்கள் இல்லாத நிறுவனங்கள் என்பதாலும் ஆவணங்களை சர்பார்க்கும் பணியை முடிக்க முடியாமல் திணறி வருகின்றன.

இதற்காக முக்கியமான நகரங்களில் KYC மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அங்கே சென்று தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்காக கடைசி தேதி ஆகஸ்டு 31 என்று குறிப்பிட்டிருந்த நிலையில், இது மிகப்பெரும் பணி என்பதால் காலநீட்டிப்பு தேவை என ஆன்லைன் பேமண்ட் நிறுவனங்கள் வலியிறுத்தி வருகின்றன. பேமண்ட் நிறுவனங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் மில்லியன் கணக்கில் இருப்பதால் இது உடனடியாக முடியும் பணியும் அல்ல என்பதால் அடுத்த மார்ச் வரை அனுமதி கேட்டு வலியிறுத்தி வருகின்றன.

ஒருவேளை ஆவணங்களை கேஒய்சியில் இணைக்காத பட்சத்தில் வாலட்டில் பெறும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்த முடியாது. மேலும் வாடிக்கையாளர்களின் பேமண்ட் அக்கவுண்ட் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி பேமண்ட் ஆப்களை உபயோகிப்பவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related posts:

ஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் !
வராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா ?
மினிமம் பேலன்ஸ் விதிகள் ரத்து? மறுபரிசீலனை செய்கிறது ரிசர்வ் வங்கி ?
இந்தியாவில் 3 வகையான வங்கிகளே செயல்பாட்டில் இருக்கும் ? நிதித்துறைச் செயலாளர் தடாலடி.
ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!
ஐஓபியின் சில்லறை கடன்களும், ஆன்லைன் வங்கி மற்றும் மொபைல் வங்கி போன்ற பயன்பாடுகளில் கிடைக்கின்றன !
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் தெரியும், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட் தெரியுமா?
கடன்களுக்கான தவணை தொகை மூன்று மாதங்களுக்கு மட்டுமே தள்ளிப் போடப்பட்டுள்ளது.?