பிளே ஸ்டோரில் 85 ஆப்கள் நீக்கம்! கூகுள் அதிரடி!

ஆண்டிராய்டு போன்களுக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான செயலிகளை தருவதற்காக அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கூகுள் பிளே ஸ்டார் கண்டிப்பாக இருக்கும். இதில் பயனர்களின் பாதுகாப்பை மீறும் ஆப்கள் அவ்வப்போது நீக்கப்படும்.

அதன் படி தற்போது 85 ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தேவையில்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவது. தேவையற்ற ஆப்களை பயனரின் அனுமதியின்றி பதிவிறக்கம் செய்துவிடுவது. அதிகமான விளம்பரங்களை பயனர்களுக்கு அளிப்பது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலும் செல்ஃபீ கேமிரா ஆப்கள்தான் அதிகம் நீக்கப்பட்டுள்ளன.