பிளாஸ்டிக் இல்லாத பேஸ்ட்!

பல் துலக்க உதவும் பற்பசை மற்றும் பிரஷ் ஆகியவை இரண்டும் பிளாஸ்டிக் இல்லாமல் தயாரிக்க முடியுமா? கனடாவை சேர்ந்த சேன்ஜ் டூத்பேஸ்ட், அதை சாதித்திருக்கிறது. வீடுதோறும் இருக்கும் பற்பசை குழாய்களை அகற்றுவதுதான் அதன் நோக்கம்.

இதற்கென பல வடிவங்களில் பரிசோதித்து, கடைசியில் மாத்திரை வடிவில் பற்பசையை தயாரித்துள்ளது சேன்ஜ். இதில் ஒரு மாதிரியை எடுத்து வாயில் போட்டு, சற்றே தண்ணீரை வாயில் தேக்கிக் கடித்து, பிரஷ் செய்தால் உடனே பற்பசை போல நுரை வாயில் கொப்பளிக்கும்.
இந்த மாத்திரையில் செயற்கை வேதிப் பொருள் எதுவும் இல்லை என இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பல் துலக்கும் பிளாஸ்டிக் பிரஷ்ஷுக்கு மாற்றாக மூங்கில் நார்களையும் மூங்கில் கைப்பிடியும் கொண்ட இயற்கை பிரஷ்ஷையும் சேன்ஜ் உருவாக்கியிருக்கிறது.

டன் கணக்கில் குப்பையில் சேரும் பிளாஸ்டிக் பேஸ்ட் குழாய்களையும், பிஷ்களையும் இனி நிச்சயம் தவிர்க்க முடியும்.