நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்க வெந்தயம் போதும்.!

நீரிழிவைக் கட்டுப்படுத்தி இன்சுலின் சுரப்பைக் கூட்ட இது ஒண்ணு போதும்…
கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, தொடரும் இன்சுலின் ஊசி இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா என்கிறீர்களா? இருக்கவே இருக்கு இன்சுலின் சுரப்பை அதிகரிக்க இயற்கை தந்த அற்புத கொடை
வெந்தயம் ஊறவைத்த நீரை குடித்தபிறகு வெந்தயத்தின் கசப்பை பிடிக்காதவர்கள் முளைகட்டி சாப்பிடுங்கள்.இன்சுலின் சுரப்பு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். நீரிழிவு கட்டுக்குள் வரும்.இன்சுலின் ஊசியுடன் போராடுபவர்கள் வெந்தயத்தையும் எடுத்தால் இன்சுலின் சுரப்பு அபரிமிதமாக அதிகரிக்கும்.நீக்கமற நிறைந்திருக்கும் நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்தமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீரிழிவை இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும் என்பதும்.

சாப்பிடும் உணவு பொருள்கள் உடலில் இருக்கும் திசுக்களுக்கு ஆற்றலைத் தரும் வகையில் சர்க்கரையாய் மாற்றப் பட்டு இரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் செய்கிறது.இந்த இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவைதான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்றழைக்கப்படுகிறது.நீரிழிவு நோய் என்றழைக்கப்படும் சர்க்கரை நோய் டைப் 1 மற்றும் டைப்2 சர்க்கரை நோய் என்றழைக்கப்படுகிறது. இதில் டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் குறைவு தான்.ஆனால் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம். அதாவது உலக அளவில் 90% பேர் இந்த டைப்2 சர்க்கரை நோயால் தான் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு மாத்திரைகள் எடுத்துகொள்வார்கள். அப்படி மாத்திரைகள் எடுத்தும் குறையாத கட்டுக்குள் அடங்காத சர்க்கரை இன்சுலின் ஊசியை தொடர்ந்து எடுக்கும் போது கட்டுக்குள் வரும்.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி அதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம். ஃப்ரீ டயபாட்டீஸ் இருப்பவர்கள் சர்க்கரை நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம்.இன்சுலின் ஊசி போட்ட பிறகுதான் சர்க்கரை கட்டுக்குள் வருகிறது என்று நினைப்பவர்கள் முதலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் உணவு வகைகளை எடுத்து கொள்ளுங்கள்.

தொடர்ந்து இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் உணவுகளை எடுத்துகொண்டால் நாளடைவில் சர்க்கரை நோய் முழுமை யாக கட்டுக்குள் வரும் என்பதோடு இன்சுலினை வாழ்நாள் முழுமைக்கும் தவிர்த்து கட்டுப்பாடோடு வைத்துக் கொள்ள லாம்.இன்சுலின் சுரப்புக்கு இந்த உணவுகள் உதவும் என்று பட்டியலிட்டு கொடுத்தாலும் அதில் முதன்மை இடம் பெறுவது வெந்தயம். வெந்தயம் அளிக்கும் பலன் என்று ஒற்றை வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு இது அற்புதமான பலன்களை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தருகிறது.வெந்தயத்தைப் பிரிக்கும் போது வெந்த+அயம் ஆகிறது. அயம் என்பது இரும்பு என்ற பொருள் படும். பஸ்பம் என்பதை வெந்த என்று சொல்வோம். ஆக பலம் வாய்ந்த இரும்பையே பஸ்பமாக்க கூடிய பொருள் என்று வெந்தயத்தைச் சொல்லலாம். நீரிழிவு நோயை முழுமையாக கட்டுக்குள் வைக்க கூடிய தன்மை வெந்தயத்துக்கு உண்டு என்று ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெந்தயத்தின் பூ, காய், விதை, கீரை எல்லாமே மருத்துவக்குணங்களைக் கொண்டவை. இதில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, நீர்ச்சத்து, மாவுச்சத்து , சுண்ணாம்புச் சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது பொருள்களும், வைட்டமின் ஏ, தயாமின், ரிபோஃப்ளேவின் போன்றவையும் நிறைந்திருக்கின்றன.நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நீரிழிவுக்காரர்களுக்கு மிகவும் நல்லது . அந்த வகையில் வெந்தயத்தில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. மேலும் இந்த நார்ச்சத்து எளிதாக கரைகிறது.
உண்ணும் உணவின் ஜீரணத்தின் வேகத்தைக் குறைப்பதால் கார்போஹைட்ரேட் உணவுகள் எடுப்பதை குறைக்க செய்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாகவே குறைக்க உதவி செய்கிறது.
வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் போது இன்சுலினை சுரக்க செய்து சரியான அளவில் கொண்டு வருகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதே நீரிழிவு கூடுவதற்கு காரணம். வெந்தயத்தைச் சாப்பிடும் போது இன்சுலின் சுரப்பு அதிகமாகும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ ஆசிட் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகமாக்குகிறது.இரவில் 1 டீஸ்பூன் வெந்தயத்தை அரைத் தம்ளர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் அரைத் தம்ளர் நீர் குடித்த பிறகு இந்த வெந்தயம் ஊறவைத்த நீரைக் குடியுங்கள். பிறகு அந்த வெந்தயத்தை மென்று சாப்பிடுங்கள். கசப்பு நிறைந்த வெந்தயத்தை சாப்பிட முடியவில்லையா இன்னுமொரு வழி உண்டு.வெந்தய நீரை குடித்து விட்டு அந்த வெந்தயத்தை மெல்லிய துணியில் கட்டி முளைகட்டி வையுங்கள். அடுத்த நாள் காலை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். இது கசப்பை அளிக்காது என்பதோடு பலனும் உண்டு. இப்படியே வெந்தய நீர் மற்றும் வெந்தயத்தை முளைகட்டி சாப்பிடுங்கள்.

வெந்தயத்தைப் பொடித்து வைத்துக்கொண்டு வெறும் வயிற்றில் அரைத்தம்ளர் நீரில் அரை டீஸ்பூன் பொடியை கலக்கி குடித்து வரலாம். இதைக் குடித்த பிறகு அரைமணி நேரம் கழித்து டீ, காபி குடிக்க வேண்டும்.நீரைக் கொதிக்க வைத்து ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக கொதித்ததும் குடித்து வாருங்கள். நீரிழிவு நன்றாக கட்டுப் பாட்டில் இருப்பவர்கள் தேவையெனில் அரை டீஸ்பூன் நாட்டு சர்க்கரை வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். இந்த வெந்தய டீ நீரிழிவுக் கட்டுப்பாடு மேலும் பல நன்மைகளை அளிக்கும்.இயல்பாகவே தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக வெந்தயம் சேர்த்து ஊறவைத்த தண்ணீரை குடித்து வருவதும் இன்சுலின் சுரப்பை ஊக்குவிப்பதாக அமையும்.இவைதவிர உணவில் தாளிப்பு பொருள்களுடன் வெந்தயத்தைச் சேர்த்து வருவதும் இன்சுலின் சுரப்பை தூண்டி நீரிழி வைக் கட்டுக்குள் வைக்க உதவும். வெந்தய நீர், முளைகட்டிய வெந்தயம், வெந்தய தேநீர், வெந்தயப் பொடி நீர் இப்படி மாறி மாறி எடுத்து வந்தால் அதிசயத்தக்க வகையில் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.வெந்தயப் பயன்பாடு, நார்ச்சத்து நிறைந்த உணவு, உணவில் கட்டுப்பாடு, உடல் உழைப்பு, உடற்பயிற்சி அனைத் தையும் தொடர்ந்து செய்யும் போது நீங்கள் அதிசயத்தக்க அளவில் நீரிழிவு நோயால் உண்டாகும் அறிகுறிகள் எல்லாம் குறையத் தொடங்கும்.

சரியான கால இடைவெளியில் சரியான முறையில் இதைப் பயன்படுத்தும் போது ஒரு மாதகால இடைவெளியில் சர்க்க ரையின் அளவை பரிசோதியுங்கள். நீரிழிவு அளவு கட்டுக்குள் இருக்கும் என்பதோடு இன்சுலின் ஊசியும் போட வேண்டிய அவசியம் இருக்காது.குளிர்ச்சி மிக்க வெந்தயத்தை ஆரம்பத்தில் எடுக்கும் போது சிறிது சிறிதாக எடுத்துவருவது நல்லது. மேலும் கொடுத்திருக்கும் அனைத்து குறிப்புகளையும் தினமும் பயன்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை செய்து பார்க்கலாம். மாத்திரைகளுடன் தினமும் வெந்தயத்தைத் தவறாமல் பயன்படுத்தும் போது மருத்துவரது ஆலோசனையும் எடுத்துக் கொள்ளுங்கள்.