நிர்மலாவுக்கு எண்டு கார்டு.. ராஜ்ய சபா வழியாக.. நிதி அமைச்சர் ஆகும் “இன்னொரு” தமிழர்?

நிர்மலாவுக்கு எண்டு கார்டு.. ராஜ்ய சபா வழியாக.. நிதி அமைச்சர் ஆகும் “இன்னொரு” தமிழர்? அவரா? லோக்சபா தேர்தலில் பாஜக கடுமையாக தோற்றாலும் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளது. இந்த நிலையில்தான் பாஜகவின் அமைச்சரவை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பின் நாட்டில் மைனாரிட்டி ஆட்சி அமைக்கப்பட உள்ளது. பாஜகவிற்கு தேர்தல் தோல்வியை விட மைனாரிட்டி ஆட்சி அமைப்பது என்பது மிக பெரிய தோல்வி. லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் முடிவுகள் என்னது கேபினட் அமைச்சர்களா? சுயரூபத்தை இப்பவே காட்டிய பாஜக! கூட்டணி கட்சிகளுக்கு தந்த பதில் இதுதான்! கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம்.  பாஜகவின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பலர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பாஜகவின் தோல்விக்கு அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.  இது போக பாஜக தலைவர் நிர்மலா சீதாராமன் மீது டெல்லி பாஜக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறதாம். அவரின் ஜிஎஸ்டி கொள்கைகள் பாஜக தோற்க முக்கிய காரணமாக அமைந்தது. அவர் மக்கள் மீது மிக அதிகமாக வரி விதித்தது பாஜகவின் தோல்விக்கு மிக பெரிய காரணமாக அமைந்தது.அவரின் செயல்பாடுகள், கோபமான பதில்கள், ஏழை மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாத செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின. கொங்கு மண்டலத்தில் பாஜக மண்ணை கவ்வ ஜிஎஸ்டி ஒரு பெரிய காரணம். இந்த நிலையில்தான் நிர்மலா சீதாராமனுக்கு எண்டு கார்டு போட பாஜக முடிவு செய்துள்ளதாம். அவருக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடையாது. இதனால் இந்த முறை வேறு ஒருவர் நிதி அமைச்சர் ஆகிறார். எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்.. தொடக்கத்தில் வடஇந்திய எம்பிக்கள் சிலர் பெயர் இதில் அடிப்பட்டது. ஏன் நிதின் கட்கரி பெயர் கூட இதில் அடிபட்டது. ஆனால் வேறு ஒரு தமிழர்தான் நிதி அமைச்சர் ஆகிறார். அவர் ராஜ்ய சபா வழியாக நிதி அமைச்சர் ஆக உள்ளார். தமிழ்நாட்டை சேர்த்தவர் . நிதி விவரங்களை அறிந்தவர். பாஜகவில் அதிக வாய்ஸ் கொண்டவர். அவர் தனக்கு இருக்கும் லாபி வழியாக எம்பி ஆவார். அதன்பின் நிதி அமைச்சர் ஆவார் என்று கூறப்படுகிறது. மற்றபடி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்கிறார்கள். அவர் என்ன மாதிரியான லாபி செய்தாலும் அது பலன் அளிக்காது என்று கூறுகிறார்கள்