நிதி மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து அரசு புது செயல் திட்டம் !

வங்கிகளில் நிகழும் ரூ. 1 லட்சத்துக்கும் குறைவான நிதி மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியுடன் இணைந்து புதிய செயல் திட்டத்தை வகுத்து வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

நிதி தகவல் பாதுகாப்பு மசோதா விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வங்கிகளில் நிகழும் தகவல் திருட்டு, சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டு உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் புதிய மசோதா இருக்கும் என்றார். தற்போது ரிசர்வ் வங்கி மற்ற பொதுத் துறை வங்கிகளுடன் இணைந்து வங்கி மோசடி குறித்து விசாரித்து வருகிறது. குறிப்பாக கிரெடிட்கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணையதளம் மூலமான பண பரிவர்த்தனையில் நிகழும் மோசடிகளில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான மோசடிகளை விசாரித்து வருகிறது.

தகவல் திருட்டு மோசடிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க இந்த மசோதா வழிவகுக்கும் என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலத்தில் மொத்தம் 921 மோசடிகள் நிகழ்ந்துள்ளன.