நிதி பற்றாக்குறை ! 13,000 இணைப்பகங்களை மூடும் BSNL?

நாடு முழுவதும் 13,000 BSNL தொலைபேசி இணைப்பகங்களை மூட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்!

ஊரகங்களில் உள்ள இந்த பெரும்பான்மை தொலைபேசி இணைப்பகங்களை மூடுவதால் BSNL நிறுவனத்திற்கு ரூ.3000 கோடி மிச்சமாகும் என இதற்கு விளக்கமளித்துள்ளது.

கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் BSNL நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் தத்தளித்து வரும் நிலையில், போதுமான செயல்பாட்டு மூலதனம் இன்மையால் பல இடங்களில் தனது சேவையை சரிவர வழங்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் செலவை மிச்சப்படுத்த குறிப்பிட்ட வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த அதிரடி முடிவினை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

BSNL நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. நிறுவனத்தை தொடர்ந்து இயக்க 13 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் BSNL கோரிக்கை வைத்துள்ளது.

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL தனியார் நிறுவனங்களின் கடும் போட்டியால் லாபமீட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. தனியார் நிறுவனங்கள் 2 ஆண்டுக்கு முன்பே 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி, தற்போது 5ஜி சேவையைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் BSNL நிறுவனமோ இன்னமும் 3ஜி சேவையைத்தான் கொடுத்து வருகிறது. 2004-05க்குப் பிறகு இதுவரையில் BSNL வாடிக்கையாளர்களின் சந்தைப் பங்கு 10% குறைந்துள்ளது.

2018-19 நிதியாண்டு கணக்கின்படி BSNL நிறுவனத்துக்கு 14 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடனிலிருந்தும், வருவாய் இழப்பிலிருந்தும் BSNL-ஐ மீட்க மத்திய அரசு இதுவரையில் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதிக ஊதியம் வழங்க வேண்டியிருப்பது, மோசமான மேலாண்மை செயல்பாடு, நவீனமயமாக்கலில் பின் தங்கியிருப்பது போன்றவை இந்நிறுவனத்தின் இயக்கத்தை கூடுதல் சுமையாக்கியுள்ளது.

Related posts:

“’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது” - மிர்ச்சி விஜய்!
நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது, மறு தேர்தலுக்கு உத்தரவு !
மதிப்புமிக்க செப்டிமியஸ் விருது விழாவில் 'மைதான்' திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது!
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் நடித்திராத துணிச்சலான காட்சியில் நடித்த சிருஷ்டி டாங்கே !
சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட்ஸ் அண்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்ஸ் சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா!
'வங்காள விரிகுடா - குறுநில மன்னன்' திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா
’கங்குவா’ படத்தின் டிரெய்லர் 3டியில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது!