நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் ? மோடி அமைச்சரவை ஒப்புதல் ?

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவையின் முடிவுகள் குறித்து தகவல் அளிக்கும் போது மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். இந்த மருத்துவக் கல்லூரிகள் 24 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படும் என்று ஜவடேகர் கூறினார். இந்த மருத்துவக் கல்லூரிகள் 2020-21க்குள் கட்டப்படும். மருத்துவக் கல்லூரிகள் இல்லாத இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். இதன் மூலம் 15 ஆயிரத்து 700 எம்.பி.பி.எஸ். இடங்கள் உருவாக்கப்படும்.

அதேபோல கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். விவசாயிகளுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்படும். இந்த மானியம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குக்கு செல்லும் எனவும் தெரிவித்தார்.

பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை உள்ள கட்டமைப்பை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என்றும் கூறினார்.

Related posts:

நீர் நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்? மத்திய அரசுஅதிரடி !
மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் நடிகர் ராதாரவி!
கிரகணம் என்றால் என்ன?
பி.எஃப்-இல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும்!
ஊடரங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி உறுதி
தன்னார்வலர்கள் உணவு வழங்க தடையில்லை ! முதல்வர் பல்டி !!
குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசா...
கொரோனா என் உடலைத் தின்கிறது ? கண்ணீரை வரவழைக்கும் ஃபிரான்ஸ் தமிழரின் பதிவு ?