தென் மாநிலங்களிலேயே தமிழகம் வாகனத்துறையில் முதலிடம் !

தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசம் புதுச்சேரி ஆகியவற்றிற்கு முன்னோடியாக திகழ்கின்ற வகையிலான, சிறப்பு நடவடிக்கையில் தமிழக அரசு களமிறங்க உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதவில் காணலாம். நாடு முழுவதும் பெரும் அதிர்வைலையை ஏற்படுத்தியுள்ளது இந்திய வாகனத்துறை. இதற்கு, இத்துறை அண்மைக் காலங்களாக சந்தித்து வரும் மிகப் பெரிய வீழ்ச்சியே முக்கிய காரணம். மிகப் பெரிய வாகனச் சந்தையாக விலங்கி வந்த இந்திய வாகனத்துறை இத்தகைய வீழ்ச்சியைச் சந்தித்து வருவது, நாட்டின் வருவாயில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என துறைசார்ந்த வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப வகையில், பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைப்பது, பணியாட்களை வேலையை விட்டு நீக்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இந்திய வாகனத்துறையின் இத்தகைய சூழலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று மின் வாகன ஊக்குவிப்பு. மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. இது நாட்டின் முக்கிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. பொதுவாக, எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, காற்றில் அதிக மாசை உண்டாக்குகின்றது. இதனால், புவி வெப்பமயமாதல், காற்று மாசுறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால், மின் வாகனங்கள் அவ்வாறு இல்லாமல், சுற்றுப்புறச்சூழலுக்கு நண்பனாக விளங்குகின்றது. அதுமட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் காட்டிலும், இவற்றை பராமரிப்பது சுலபம். ஆகையால், குறைந்த செலவில் அதிக பலன் மின் வாகனங்களில் கிடைக்கும். மேலும், தற்போது கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அரசு செலவிடும் தொகையும் கணிசமாக குறைக்கப்படும். இதுபோன்ற பல காரணங்களால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மின் வாகன பயன்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக ஃபேம் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் நாடு முழுவதும் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும். அதற்கேற்ப வகையில், மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இத்திட்டத்தின்மூலமே கொண்டுவரப்படுகின்றது.

இந்நிலையில், தமிழக அரசு இத்திட்டத்தின்மூலம், பொது பயன்பாட்டிற்கான மின் வாகனங்களை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அசோக் லேலேண்ட் நிறுவனம் தயாரித்த மின்சார பஸ்களை மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.  அந்தவகையில், ஃபேம்-2 திட்டத்தின்கீழ் 525 யூனிட் மின்சார பஸ்களை தமிழக அரசு பயன்பாட்டிற்குக் கொண்டு வரவுள்ளது. தென் தமிழகத்திலேயே இத்தகையை நடவடிக்கையில் களமிறக்குவது தமிழகம்தான் முதலிடம்.  எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய தகவல் இதுகுறித்து, எம்டிசி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, “சோதனையோட்டமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மின்வாகனங்களை அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் ஊழியரே இயக்க உள்ளார். ஆனால், அதில் ஓட்டுநராக எம்டிசி கழகத்தின் பணியாளர் அமர்த்தப்படுவார். மின் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக அந்தந்த பேருந்து பணிமனைகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆகையால், தங்கு தடையின்றி மின்சார பேருந்து இயக்கப்படும்” என்றார்.

முன்னதாக, நடப்பாண்டில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கேஎஃப்டபிள்யூ குழுமத்திடம் நிதி பெற்று மாநிலத்தில் மின் வாகனங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரவிருப்பதாக அறிவித்திருந்தார். இதனடிப்படையில், தற்போது மாநிலத்தின் சில முக்கிய பகுதிகளில் இயக்கும் விதமாக மின்சார பேருந்துகள் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. முக்கியமாக, அவை பாரிஸ்முனை, கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து சென்னை நகரத்தின் பல இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன. பின்னர், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. வாகன துறை சார்ந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்படும் தமிழக அரசு, முன்னதாக சாலையில் அதிகரித்து விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கின்ற வகையிலான ஓர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு தற்போது ஓரளவிற்கு பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. ஆம், தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. உண்மைதான். கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,216. இது கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.4 சதவீதம் குறைவு. ஆனால் கடந்த மூன்று ஆண்டு கால அளவில், பஸ்களின் விண்டுஷீல்டில், அதாவது கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களால் நடைபெறும் விபத்துக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

பெருநகர போக்குவரத்து கழகம் எனப்படும் எம்டிசியால் (MTC – Metropolitan Transport Corporation) சென்னையில் இயக்கப்பட்டு வரும் பஸ்கள் கடந்த ஆண்டு 1,066 சாலை விபத்துக்களில் சிக்கியுள்ளன. இந்த விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் பாதசாரி. இதில் 69 சதவீதம் பேர் பஸ்ஸின் முன் பகுதி மோதியதால் உயிரிழந்துள்ளனர். பஸ்களின் டிரைவர்களுக்கு பின் பகுதியை காட்டிலும் முன் பகுதியில்தான் அதிக பிளைண்ட் ஸ்பாட் (Blind Spot) உள்ளது என்பதை இவை நிரூபணம் செய்கின்றன. டிரைவர்களின் கண்களுக்கு புலப்படாத பகுதியே பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகிறது. சென்னை புரசைவாக்கம் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற மற்றொரு சாலை விபத்து இதை மேலும் உறுதி செய்தது. சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் மீது எம்டிசி பஸ்ஸின் முன்பகுதி மோதியது. இந்த விபத்து கடந்த வாரம் நடைபெற்றிருந்தது. பஸ்ஸின் முன் பகுதியில் மூதாட்டி ஒருவர் இருப்பதை டிரைவரால் பார்க்க முடியவில்லை. இதுவே விபத்துக்கு காரணம். தற்போது இந்த பிரச்னைக்கு அதிரடியாக முடிவு கட்டப்பட்டுள்ளது. ஆம், இனி தமிழக அரசு பஸ்களின் விண்டுஷீல்டில், வாழ்க வளமுடன், முருகன் துணை, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பொதிகை தென்றல் என்பது போன்ற ஸ்டிக்கர்களை பார்க்க முடியாது.

அரசு பஸ்களின் கண்ணாடியில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு போக்குவரத்து துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. டிரைவர்களின் பார்க்க கூடிய நிலையை (Visibility) இந்த ஸ்டிக்கர்கள் குறைத்து விடுகின்றன. இதன் காரணமாகதான் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். ஆனால் இனி அவர்களால் இதனை செய்ய முடியாது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து டெப்போக்களும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெக்னிக்கல் சூப்பர்வைசர்களுக்கும் இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அனைத்து போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கும் ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் கூறுகையில், ”ஆர்டினரி, ஸ்பெஷல் அல்லது அல்ட்ரா டீலக்ஸ் என பேருந்து சேவை வகையை விளக்கும் ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இடது புறத்தில் (Left Side) மேலாகதான் ஒட்ட வேண்டும். பஸ் ஸ்டாப்களில் காத்து கொண்டிருக்கும் பயணிகள் இதை பார்த்துவிட்டு பேருந்தில் ஏறிக்கொள்ள முடியும்” என்றனர். இந்த நடவடிக்கை மூலமாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தால், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிதான். Most Read Articles

Related posts:

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த தயாரிப்பாக நெஞ்சை நெகிழ வைக்கும் படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’!
’மக்கள் செல்வி’ வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘டேனி’.!
'கோட்' பக்கா கமர்ஷியலான திரைப்படம் தான்-இயக்குநர் வெங்கட் பிரபு !
”‘நேசிப்பாயா’ திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது” - யுவன் ஷங்கர் ராஜா!
தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலையை இழந்தால் உதவித்தொகை வழங்கப்படும் !
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் முதல் பாடலான 'மக்காமிஷி' வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!
'கொலைச்சேவல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா ரஞ்சித் வெளியிட்டார் !
ஏடிம் கார்டு பத்திரம் ?