திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்

திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்றாலும் ஐந்து விஷயங்கள் மக்கள் கவனத்தை ஈர்க்கும் என்கிறார்கள்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்வு, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு, நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு உள்ளிட்ட ஐந்து விஷயங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
மே 7-ம் தேதி தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட முக்கியமானவற்றை பட்ஜெட்டில் அறிவித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் ஸ்டாலின். அதுவும் அவர் பதவியேற்று 100வது நாள் ஆகஸ்ட் 15ல் வருகிறது.அதற்கு முன்பு ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்து மக்களுக்கு இன்ப அதிர்ச்தி தர விரும்புகிறார் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இந்த முறை பட்ஜெட் இரண்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது, அதாவது பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் என இரண்டு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்., வேளாண் துறைக்கான பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்
செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு ஆண்டுகளாக அரசியலில் இருந்தாலும், முதல்வராக பதவியேற்றுள்ள முதல் வருடம் இதுதான்.இந்த பட்ஜெட் வரலாற்றில் இருக்க வேண்டும் என்கிற வகையில தயாராகி வருகிறதாம்.பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.அதில் இந்த ஐந்து விஷயங்கள் நிச்சயம் மக்களிடம் வரவேற்பை பெறும் என்று சொல்கிறார்கள்.
அதாவது போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், இந்த திட்டத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இது பட்ஜெட்டில் இடம்
பெற வாய்ப்பு உள்ளதாம்.இதேபோல் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்துவது குறித்தும் அடுத்த வார பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதாம்.

வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு என்ற அம்சமும் இடம் பெறக்கூடும் என்கிறார்கள். இந்த திட்டம் பெண்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். இதேபோல் நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்வு போன்றவையும் அறிவிக்கப்பட உள்ளதாம். எந்தெந்ந நகராட்சிகள் மாநகராட்சிகளாக மாறப்போகின்றன என்பது விரைவில் தெரிந்துவிடும். ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள் காஞ்சிபுரம், விழுப்புரம் போன்றவை மாநகராட்சியாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல் பேரூராட்சிகள் சில நகராட்சிகளாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதுதவிர, சென்னை நகரின் ஆறுகள் பாதுகாப்புக்காக 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படலாம் என்கிறார்கள். அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப், அரசுக் கல்வி வளாகங்களில் வைஃபை வசதி. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்பது, சென்னை செம்மொழி பூங்காவிற்கு புத்துயிர் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.இந்த பட்ஜெட் ஸ்டாலினின் பெயர் சொல்லும் பட்ஜெட் டாக் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts:

உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட ‘கண்ணப்பா’ படக்குழு!

பரம்பொருள்-- விமர்சனம் !

"சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக ‘ஜாலியோ ஜிம்கானா’ படம் இருக்கும்" - நடிகை மடோனா செபாஸ்டியன்!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகி...

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனின் அடுத்த தயாரிப்பாக நெஞ்சை நெகிழ வைக்கும் படமாக வெளியாகிறது ‘குரங்கு பெடல்’!

‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.!