தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்து இருக்கிறது. வேகமாக குணமாகும் கொரோனா நோயாளிகள்… இதான் காரணமா? கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா சிகிச்சை தற்போது உலகம் முழுக்க பிரபலம் அடைந்து வருகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள உலகம் முழுக்க பல நாடுகள் முயன்று வருகிறது. ஏற்கனவே தென்கொரியாவில் இந்த சிகிச்சை மூலம் பலர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அமெரிக்காவிலும் தற்போது இதை வைத்து சோதனைகளை செய்து வருகிறார்கள். விரைவில் அங்கும் பிளாஸ்மா கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று கூறுகிறார்கள்.

பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத்தத்தில் இருந்து இன்னொருவரின் ரத்த செல்களுக்கு ஆண்டிபாடிகளை கடத்துவது ஆகும். அதாவது ஒருவரின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத்தத்திற்கு அனுப்புவார்கள். பொதுவாக கொரோனா தாக்கி அதில் இருந்து குணமடைந்த ஒருவரின் உடலில் அந்த கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி செல்கள் அதிகம் இருக்கும். இந்த செல்களை வைத்துதான் இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள். எப்படி சிகிச்சை செய்வார்கள் இந்த எதிர்ப்பு சக்தி செல்கள் அவர்களின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும். அதன்படி கொரோனா தாக்கி குணமடைந்த நபரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து கொரோனா பாதித்த வேறு ஒரு நபருக்கு செலுத்துவார்கள். அதாவது கொரோனா தாக்கி குணமடைந்த நபரின் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொரு நபருக்கு செலுத்தி அவருக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா சிகிச்சை அளிப்பார்கள். இதுதான் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.

இந்த கொரோனா பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள தமிழக அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் அனுமதி கேட்டு இருந்தது. நாங்கள் இதை முயற்சி செய்ய விரும்புகிறோம் என்று தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது. இதற்கு தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் சாத்திய கூறுகளில் தமிழக அரசு மருத்துவர்கள் களமிறங்கி பணியாற்றி வருகிறார்கள். 2 வாரத்தில் முடிப்போம் இந்த ஆராய்ச்சிகளை இரண்டு வாரத்தில் முடிப்போம். இது தொடர்பாக டிஸ்சார்ஜ் ஆன நோயாளிகள் உடன் பேசி வருகிறோம். அவர்களின் ரத்தத்தை வாங்கி அதை சோதனை செய்வோம். பின்பு அதை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை செய்வோம். இன்னும் 2 வாரங்களில் இந்த சிகிச்சையை தொடங்க உள்ளோம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் 2 வாரத்தில் நோயாளிகள் பலர் குணமடைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். வேகமாக குணமடைவார்கள் பிளாஸ்மா சிகிச்சை மூலம் உடலில் புதிதாக செலுத்தப்படும் எதிர்ப்பு சக்தி செல்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும். உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி தானாக மீண்டும் வரும் வரை இந்த வெளியே இருந்து வந்த எதிர்ப்பு சக்தி செல்கள் தனது பணியை சிறப்பாக செய்யும். இந்த சிகிச்சை முறை வேகமானது. நான்கு – ஐந்து நாட்களில் இதன் மூலம் உடலில் முன்னேற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

அவனே ஸ்ரீமன் நாராயணா...அதிக திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். !
காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'!
நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், "படை தலைவன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியிட்டார் !!
யோகியே முதல்வர் வேட்பாளர் ?  சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உத்தரப் பிரதேச பாஜக?!
உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. !
அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
ஹம்ஸா அறக்கட்டளையின் மூலம் வசதிவாய்ப்பற்றவர்களுக்கு இலவச சிகிச்சை !
ரூ.8.64 லட்சம் விலையில் கேடிஎம் 790 ட்யூக் பைக் !