தங்கத்தில் முதலீடு செய்வது லாபமா நஷ்டமா?

இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது எப்படி?

கடந்த ஓராண்­டாக சிறப்­பாக செயல்­பட்டு வரும் திட்­டங்­களில், தங்க ஈ.டி.எப்., திட்­ட­மும் ஒன்­றா­கும். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து இது­வரை இந்த திட்­டத்­தில், 2,414 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­னங்­க­ளின் கூட்­ட­மைப்­பான, ’ஆம்பி’ வெளி­யிட்­டுள்ள தக­வல்­க­ளின் படி, இத்­திட்­டத்­தில் ஏப்­ரல்
மாதத்­தில், 731 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இதுவே, இதற்கு முந்­தைய மார்ச் மாதத்­தில், 195 கோடி ரூபாய் இந்த திட்டத்­தி­லி­ருந்து வெளியே­றி­யுள்­ளது.இது குறித்து, மியூச்­சு­வல் பண்டு நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:
கடந்த, 2011ம் ஆண்­டி­லி­ருந்தே இந்த திட்­டம் சிறப்­பாக செயல்­பட்டு வரு­கிறது. மிக­வும் பாது­காப்­பான இந்த திட்­டத்­தில், கடந்த ஏப்­ரல் மாதத்­தில் கொரோனா பாதிப்­பு­க­ளை­யும் மீறி அதிக முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இதற்கு முக்­கிய கார­ணம், பிற நிதி சந்­தை­கள் மற்­றும் திட்­டங்­களில் கடு­மை­யான ஏற்ற தாழ்­வு­கள் காணப்­பட்­டது. இந்­நி­லை­யில், மிக­வும் பாது­காப்­பான முத­லீ­டாக தங்­கம்
கரு­தப்­பட்­ட­தால், தங்க ஈ.டி.எப்., திட்­டங்­களில் அதிக முத­லீடு வந்­துள்­ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக, பொருளாதார சரிவுகள் ஏற்படும் காலங்களிலும், கோவிட்-19 போன்ற கொள்ளை நோய்களால் உருவாகும் நெருக்கடி காலங்களிலும் மக்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்புவது வழக்கம். இச்சமயங்களில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என பலர் கருதுகின்றனர்.

நெருக்கடி காலங்களில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதால் தங்கம் விலை உயர்வது வழக்கம். இச்சமயத்தில் பங்குச் சந்தையை காட்டிலும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. பெருவாரியான மக்களுக்கு தங்கம் என்றால் நகைகள் மட்டுமே நினைவுக்கு வருகிறதே தவிர அதனால் கிடைக்கக்கூடிய லாபம் தெரிவதில்லை.

தங்கம் என்றால் செய்கூலி, சேதாரம் என இழப்புதானே ஏற்படும்? இதனால் என்ன லாபம் வரப்போகிறது என பலரும் கேட்கலாம். மத்திய அரசின் தங்கப் பத்திரத் திட்டத்தின் (Sovereign gold bond scheme) கீழ் தங்கப் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இத்திட்டத்தில், தங்கத்திற்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். கூடுதலாக செய்கூலி, சேதாரம் என எதுவும் கிடையாது. ஆகவே, இப்பத்திரங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம்.

தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 விழுக்காடு வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி வாயிலாக வருமானம் ஈட்டிக்கொள்ளலாம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4449 ஆகும். ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.4658 ஆகும். விலை ஏற ஏற வட்டி வாயிலாக லாபமும் அதிகரிக்கும்.

தங்கப் பத்திரங்களை வாங்கி எட்டு ஆண்டுகள் வைத்திருக்கலாம். எட்டு ஆண்டுகள் முடிந்தப்பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை. எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்றாலும், அவசர தேவை ஏற்பட்டாலும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் பத்திரத்தை விற்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அச்சமயத்தில் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். தங்கப் பத்திரம் என்பது கிட்டத்தட்ட தங்கத்தை போன்றதுதான். இந்தப் பத்திரத்தை வங்கியில் அடகு வைத்தும் கடன் பெறலாம்.கொரோனா பாதிப்­பு­களுக்­கி­டை­யே­யும் , கடந்த ஏப்­ரல் மாதத்­தில், 731 கோடி ரூபாய் அள­வுக்கு, தங்க ஈ.டி.எப்., திட்­டத்­தில் முத­லீ­டு­கள் வந்­துள்­ளன.

Related posts:

தலைமை அதிகாரிகளை உருவாக்கும் தொழிற்சாலை இந்துஸ்தான் யுனிலீவர் !
SME வளர்ச்சியை மேம்படுத்தும் சூழல் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் கோட்டக் மஹிந்திரா வங்கி !
Samsung Launches 8GB+128GB Variant of Galaxy F15 5G !
இந்தியாவில் டைசன் நிறுவனத்தின் நான்காவது கிளை சென்னையில் ஆரம்பம் !
தி நகர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிராண்டட் நகைகள் - கண்காட்சி !
இந்தியா முழுவதும் மாபெரும் 'தேடல்', 'திறத்தல்' மற்றும் 'பதிவிறக்கம்' பொத்தான்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள மர்மம் தீர்க்கப்பட்டது!
சென்னை, அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள 'கீதம் வெஜ்' ரெஸ்டாரண்ட்!
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வரம்பு தளர்வு !