உலகின் முன்னணி ஜுவல்லரி நிறுவனமான ஜோயாலுக்காஸ் தன்னுடைய பிரம்மாண்டமான ஷோரூம் திறப்பு விழாவை அறிவித்துள்ளது. வரும் 22 ஜூன் 2024 அன்று ஜோயாலுக்காஸ் சென்னையில் அற்புதமான ஒரு ஜுவல்லரி அனுபவத்தை அண்ணாநகர் வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறது. இந்த திறப்பு விழாவை முன்னிட்டு ஜோயாலுக்காஸ் துவக்க விழா சலுகையாக தங்கம், வைரம், வெள்ளி நகைகள் ஆகியவற்றுக்கு செய்கூலி மற்றும் சேதாரத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கிறது, இச்சலுகை ஜூலை 14, 2024 வரை கிடைக்கிறது.
அண்ணாநகர் ஷோரூம் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட ஆடம்பரமான ஷோரூமாக திகழ்கிறது. மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் ஒரு மில்லியன் டிசைன்களை கொண்ட ஜுவல்லரி சாம்ராஜ்யமாக விளங்குகிறது. மேலும் இந்த ஷோரூம் தலைசிறந்த வசதிகளுடன் வேறெங்கும் கிடைக்காத ஜுவல்லரி ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்கிறது. தங்கம் வைரம் வெள்ளி பிரஷ்யஸ் ஜுவல்லரி என்று ஒவ்வொரு வகையிலும் அமைந்துள்ள ஆபரணங்கள் மிகுந்த தரத்துடன், கலை வேலைப்பாட்டுடன், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘’எங்கள் அண்ணாநகர் ஷோரூம் திறப்புவிழாவை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதே நேரம் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த ஷாப்பிங் அனுபவத்தையும் இத்துடன் நாங்கள் சமர்ப்பிக்கிறோம். இந்த உலகத்தரம் வாய்ந்த ஷோரூமுடன் தரத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பு மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான எங்கள் முயற்சி அனைத்து அம்சங்களிலும் எதிரொலிப்பது உறுதி. இந்த திறப்புவிழாவுடன் எங்கள் சிறப்பு துவக்க விழா சலுகையை பெற்றிட அனைவரையும் வரவேற்கிறோம்,” என்று ஜோயாலுக்காஸ் ஷோரூமின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் திரு ஜோய் ஆலுக்காஸ் அவர்கள் தெரிவித்தார்.
அண்ணாநகர் ஷோரூமின் இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவில் கலந்துகொள்ளுங்கள். ஏன் உலகின் ஃபேவரிட் ஜுவல்லரியாக ஜோயாலுக்காஸ் திகழ்கிறது என்பதையும் கண்டறியுங்கள். இந்த புதிய ஷோரூமின் அழகையும் நேர்த்தியையும் கண்டு ரசியுங்கள், சிறப்புச்சலுகைகளையும் அனுபவித்து மகிழுங்கள்.
