ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அண்மையில் தனது ஜியோபோன் 2 என்ற பியூட்சர் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்த சில நிமிடத்திலேயே அனைத்து யூனியட்களும் விற்று முடிந்தது. இந்த புதிய ஜியோபோன் 2 இல் வாட்ஸ் ஆப் இணக்கம் மற்றும் யூடுப் இணக்கம் என பலதரப்பட்ட சேவைகள் ஜியோ பயனர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருக்கிறது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! பயிற்சி பிரச்சாரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஜியோ நிறுவனம் வாட்ஸ் ஆப் உடன் இணைந்து இந்திய மக்களுக்கு ஜியோபோன் 2 இல் மொபைல் மெசேஜிங் தளம் பற்றிய பயிற்சி வழங்கும் பிரச்சாரத்தை நேற்று துவங்கியுள்ளது. சிம்பிளா சொன்ன மக்களுக்கு வாட்ஸ் ஆப் பற்றிய டியூஷன் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்து முயற்சி செய்துள்ளது. அக்டோபர் 9 அக்டோபர் 9 ஆம் தேதி, வாட்ஸ் ஆப் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து இந்தியாவில் உள்ள கிராமங்கள் மற்றும் தெருக்களில் தனது பயிற்சி பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஒன்றிய தெருக்கள் மற்றும் கிராமங்களில் பிரத்தியேக முறைப்படி ஜியோ பயனர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு வாட்ஸ் ஆப் எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்ற பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் புரட்சி மில்லியன் கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியை மேம்படுத்துவதில், ஜியோ நிறுவனத்திற்கு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இத்துடன் பயிற்சி பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாட்ஸ் ஆப் அதிகாரி கூறுகையில், மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கான எளிய மற்றும் பாதுகாப்பான வாட்ஸ் ஆப் தொடர்பு பற்றி பயிற்சி பிரச்சாரம் துவங்கியது மனதிற்குச் சந்தோஷமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 11 இந்திய மொழி டுடோரியல் ஜியோ நிறுவனம் வாட்ஸ் ஆப் நிறுவனத்துடன் இணைந்து, வீடியோ டுடோரியல்களையும், ஆன்லைன் தகவல்களையும், நோட்டீஸ் பேப்பர்களையும் ஜியோ நிறுவனம் ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற 11 இந்திய மொழிகளில் உருவாக்கி, மக்களிடம் இந்தத் திட்டம் சேரும்படி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.