நாடு முழுதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அவசிய தேவை இல்லாமல், வாடிக்கையாளர்கள் நேரில் வர வேண்டாம் என, வங்கிகள் அறிவுறுத்தி உள்ளன.இந்த நிலையில், ஜன்தன் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட, மத்திய அரசின் உதவித் தொகையையும், முதியோர் உதவித் தொகையையும் எடுக்க, வங்கிகளில், நேற்று கூட்டம் அலைமோதியது.வங்கி அதிகாரிகள் கூறியதாவது:ஜன்தன் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட, மத்திய அரசின் உதவித் தொகையை பெற, வாடிக்கையாளர்கள், அதிக அளவில் வந்தனர்.இதேபோல, முதியோர் உதவித் தொகை பெற, முதியோர்கள், நேற்று அதிகளவில் வந்தனர். இதுதவிர, தொடர்ந்து, மூன்று நாட்கள் வங்கி விடுமுறை விடப்பட்டதும், வாடிக்கையாளர்கள் கூட்டம், அதிகளவில் வந்ததற்கு, ஒரு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
காலாவதியான கணக்குஉயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் துவங்கிய, ஜன்தன் வங்கிக் கணக்குகளை, வாடிக்கையாளர்கள் முறையாக பராமரிக்கவில்லை.இதனால், பெரும்பாலானோர் கணக்குகள், காலாவதியாக விட்டன. அந்த கணக்கை மீண்டும் செயல்படுத்த, கணக்கில் குறைந்த தொகையை செலுத்த வேண்டும். இதற்கு, வாடிக்கையாளர்களின், ‘ஆதார்’ நகல் கட்டாயம் தேவை. இந்த பிரச்னைகளால், வாடிக்கையாளர்கள் சிலரால் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.