செல்போன் டவர் வைக்க 80 லட்சம் அட்வான்ஸ்! மாசம் 50,000 வாடகை! உஷார்!!

இணையதளம் முழுக்கவே வோடோபோன், ஏர்டெல் நெட்வொர்க் தனது சேவையைத் தொடர முடியாமல் தத்தளித்து வருகிறது என்று செய்திகள் வாட்ஸ்-அப், ட்விட்டர் என்று வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
92,000 கோடி ரூபாய் பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அதிரடியாக வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் நிலையில், இந்த செல்போன் நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரு நெட்வொர்க் சேவைக்கு மாறி வரும் அளவிற்கு செல்போன் பயனாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், பேராசையுடன் காத்திருக்கும் நில உரிமையாளர்களுக்கு பொறி வைத்து ஏமாற்றுவதற்கு ஒரு கும்பல் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

பிரபல செல்போன் நிறுவனங்களின் டவர் வைப்பதற்கு ஒன்றிலிருந்து, ஒன்றரை செண்ட் வரையில் நிலம் தேவைப்படுகிறது. காலி இடமாக இருந்தாலும் சரி, அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் சரி. அபார்ட்மெண்ட்டாக இருந்தால், குடியிருப்பவர்கள் அத்தனைப் பேரும் வாடகையைப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளைச் சொல்லி வலை விரிக்கிறார்கள்.

குறைந்தது 15லிருந்து 20 வருஷம் வரையில் ஒப்பந்தம். ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை வாடகையை ஏற்றி தருவோம் என்று பேசும் இவர்கள், அட்வான்ஸ் தொகையாக 80 லட்சமும், மாத வாடகையாக 50,000 ரூபாயும் தருவதாக அதிர வைக்கிறார்கள். இத்தனைக்கும் உங்களோட காலி இடம் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பரவாயில்லை.. அந்த இடத்தோட பத்திரம், ஆதார் கார்ட் ஜெராக்ஸ், போட்டோ மட்டும் கொடுத்தீங்கன்னா ரெண்டே வாரத்துல உங்களோட பெயருக்கு அக்ரிமெண்ட் போட்டுட்டு, அட்வான்ஸ் தொகையைக் கொடுத்திடுவோம் என்கிற ரீதியில் அந்த கும்பல் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களே உஷார்!! தேவையில்லாம இப்படி வலை விரிக்கிறவங்க கிட்ட ஏமாந்து நிற்காதீங்க..!

Related posts:

கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகள் பறிமுதல்! அமைச்சா் விஜயபாஸ்கா் தகவல் !!
அழிவைச் சந்திக்கிறதா, ஆட்டோமொபைல் சந்தை?
விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் 'ரெட் ஃப்ளவர்' செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !
தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்த குழந்தை பிறந்தது ! ரெயின்போ மருத்துவமனை சாதனை!!
பிரதர்-- விமர்சனம்.!
பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின்மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!
தமிழ்நாட்டில் கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது !