சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் தொழில் கண்காட்சி !

தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் குறித்து கருத்தரங்கம் மற்றும் தொழில் கண்காட்சி. டிசம்பர் 28 29 நந்தம்பாக்கம் , சென்னை வர்த்தக மையம் தமிழ்நாடு சிறுதொழில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் 1964 – ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும் . இதில் சுமார் 600 உறுப்பினர்கள் உள்ளனர் . தமிழகத்தில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் தொழில் வளர்ச்சிக்கும் , நவீன தொழில் நுட்பங்களை கண்டறிந்து தொழில் முனைவோர்களுக்கு எடுத்து கூறவும். இத்தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய முறையில் அரசுக்கு எடுத்து கூறி தீர்வு காண்பதே இந்த சங்கத்தின் நோக்கமாகும்.

தற்போது சங்கத் தலைவராக இருக்கும் பவர் சோப் உரிமையாளர் கி.தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது. கடந்த 1995ம் ஆண்டு சங்கத்திற்கென சொந்த கட்டிடம் கட்டப்பட்டு சீரிய முறையில் அலுவலகம் இயங்கி வருகிறது . இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது . வருகின்ற 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 – 29 ஆகிய இரு தினங்கள் 6 வது முறையாக தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜென்ட் கருத்தரங்கம் , தொழில் கண்காட்சியினையும் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கருத்தரங்கின் நோக்கம் தற்போது டிடர்ஜென்ட் சோப் உற்பத்தியில் நவீன தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் தரமான டிடர்ஜென்ட் சோப் மற்றும் பவுடர் தயாரிக்கும் வழிமுறைகளை தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள டிடர்ஜென்ட் உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

தென்னிந்தியாவில் உள்ள சோப் மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி கலந்துரையாடுதல், சோப் மற்றும் டிடர்ஜென்ட் தொழிலின் நவீன தொழில்நுட்பங்களை கண்டறியும் வகையில் இயந்திரங்கள் கண்காட்சி நடைபெறும்.கண்காட்சியில் அகில இந்திய அளவில் உள்ள இயந்திர உற்பத்தியாளர்கள், மூலப்பொருட்கள் விற்பனையாளர்களை பங்கு பெற செய்தல்.நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் தரமான டிடர்ஜென்ட் சோப் மற்றும் பவுடர் தயாரிக்கும் வழிமுறைகளை விளக்கமளித்தல் – பல நிறுவனங்கள் தங்களின் விரிவாக்கத்தை மேற்கொள்ள இக்கண்காட்சி உதவும். 70-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள சோப் மற்றும் டிடர்ஜென்ட் இயந்திர உற்பத்தியாளர்கள். மூலப்பொருட்கள் சப்ளையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இயந்திரங்களையும், மூலப்பொருட்களையும் டிஸ்பிளே செய்ய உள்ள இயந்திரங்களின் நேரடி செயல்முறை விளக்கத்துடன் காண்பிக்கப்படுகின்றன .

தொழில் கருத்தரங்குகள் வேந்தர் தொலைகாட்சி புகழ் ரெங்கராஜ பாண்டே இன்றைய பொருளாதார சூழலும் சந்தைவாய்ப்புகளும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார். மேலும் சோப் மற்றும் டிடர்ஜென்ட் தொழிலின் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள், தரமான சோப்புகளை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகள், உற்பத்தி செலவை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு விளக்கமளிக்க உள்ளனர் .தமிழகம்,ஆந்திரா,கர்நாடகம், கேரளா, மற்றும் பாண்டிசேரி ஆகிய மாநிலங்களிலிருந்து சோப் மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் . துவக்கவிழா தேசிய அளவிலான தொழில் கருத்தரங்கு மற்றும் டிடர்ஜென்ட் சோப் தொழில் கண்காட்சியின் துவக்க விழா 28 . 12 . 19 சனிக்கிழமையன்று காலை 10 . 00 மணிக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது . தமிழ்நாடு ஊரக வளர்ச்சி . பஞ்சாயத்துராஜ் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா ஐஏஎஸ் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பொன் விழா சிறப்பு மலரை வெளியீட்டு தொடக்க உரையாற்றுகிறார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் M. ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் பொன்விழா அஞ்சல் தலையை வெளியிட்டு விழா பேருரையாற்றுகிறார் . தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர் S.இரத்தினவேலு மற்றும் தமிழ்நாடு குறு மற்றும் சிறுதொழில்கள் சங்கத்தின் தலைவர்S.அன்புராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர் என்றார்.பேட்டியின் போது கெளரவ பொதுச்செயலாளர் செல்வம்.முன்னாள் தலைவர் மணிமாறன் மற்றும் பொருளாளர் பழனி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.