சென்னை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இ-கோர்ட் !

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இணையமயமானதால் உதயமாகிறது சென்னையின் முதல் இ-கோர்ட்.வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அன்றாட பணிகளின் செயல்திறத்தை மேம்படுத்தும் விதமாக, கடந்த 2012 முதலே புதிய தொழிட்நுட்பங்களை வரவேற்று, அவற்றை தமது தனி தேவைகளுக்கென ஆற்றுப்படுத்தி, டிஜிட்டல் கோர்ட் அல்லது இ-கோர்ட்டாக உருமாற்றி வருகிறது. தில்லி, நாக்பூர், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் இந்த இ-கோர்ட் தங்கு தடையற்ற இணையவழி வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்படுகிறது.

சென்னை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய அலுவலகத்தில், ஒரு தனி அறையில் அதிநவீன இணையவழி வீடியோ கான்பரன்சிங் வசதிகளுடன் ஒரு புதிய நீதிமன்ற அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் அமையவுள்ள இந்த புதிய இ-கோர்ட்டை மாண்புமிகு நீதியரசர் திரு பி பி பட், தலைவர், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சென்னை, மேதகு திரு ஜி எஸ் பண்ணு, மேதகு திரு. என் வி வாசுதேவன் மற்றும் திரளான தீர்ப்பாய உறுப்பினர்கள் முன்னிலையில் வருகின்ற நவம்பர் 15ம் தேதி,வெள்ளிக்கிழமை :மதியம் 12.05 அளவில் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவைத் தொடர்ந்து, வழக்குகள் விசாரணை புதிய இ-கோர்ட் வளாகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.