சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் “எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதய பராமரிப்பு மாநாடு” என்ற உச்சிமாநாட்டை சென்னையில் நடத்தியது. இதய நோய்களை ஒழிப்பது மற்றும் அவை வராமல் தடுப்பது தொடர்பான கண்ணோட்டங்கள் மற்றும் நுண்ணறிவை இந்த மாநாடு வழங்கியது.
இந்த இதய நோய் சிகிச்சைத் துறையில் உள்ள அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு வந்த இந்த எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இதய பராமரிப்பு என்ற உச்சிமாநாடு, முக்கிய பங்குதாரர்கள், சிறந்த சிகிச்சை வல்லுநர்கள், நோய்த் தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளது. இதய நோய்கள் அதிகரிப்பதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் கால அளவுடன் கூடிய பரிந்துரைகளை உருவாக்கவும் இந்த ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன இதய பராமரிப்பு முறை மற்றும் தொழில் நுட்ப ஏற்பு ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நோயற்ற இந்தியாவை உருவாக்குவதற்கு இந்த உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இதில் பேசிய அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, “தொற்றா நோய்களில் மிக முக்கியமானது இதய நோய். இந்தியாவில் இந்த நோய் அதிகமாக இருப்பதுடன் அதிக இறப்புக்கும் காரணமாக இருக்கிறது. இதய நோய்கள் அதிகரிப்பதைத் தடுத்து சிக்கலைத் தவிர்க்க நாம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட இந்த இதய பராமரிப்பு மாநாடு, அந்த திசையில் ஒரு முக்கியமான படி ஆகும். சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரைகள் உருவாக்கவும் இந்த மாநாடு மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கிறது. எதிர்காலத்தைத் திட்டமிடும் நோக்கில் ஒரு முறையான நடைமுறையைத் தொடங்கவும் தங்களால் முடிந்த தகவல்களைத் தரவும் இந்த உச்சிமாநாடு ஒரு தொடக்கமாக இருக்கிறது. எதிர்காலவாதிகளான அப்பல்லோ குழுவினர் மாற்றங்களை ஏற்படுத்தி புதுமைகளை உஙகளுடன் இணைந்து படைக்க விரும்புகின்றனர். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை இதய நோய் இல்லாத நாடாக மாற்றுவோம்.” என்றார்.