குழந்தைக் கண்ணனை ஒன்பான் மணிகளோடு ஒப்பிட்டுக் கொஞ்சும் “முத்தம் தூறும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் அன்னமையாவின் “முத்துகாரே யசோதா” என்ற தெலுங்குப் பாடலின் தமிழாக்கமாகும்.
புகழ்பெற்ற இந்தத் தெலுங்குப் பாடலைப் பாடலாசிரியர் மதன் கார்க்கி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதனைப் பாடகி சுவேதா மோஹன் பாடியுள்ளார். குழந்தைக் கண்ணனின் சிறுவயது துணிவுமிக்க செயல்களை அழகாக எடுத்துரைத்து, வரிக்கு வரி முத்தே மணியேயென்று கண்ணனை விளிக்கும் இப்பாடல் சுவைமிக்கது. வரிகளின் பொருள் மாறாமல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள “முத்தம் தூறும்” பாடலுக்குச் சாம் லாரன்ஸ் இசைக்கோர்ப்பு செய்துள்ளார். இப்பாடலின் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியான நிலையில், பா மியூசிக் யூடியூப் தளத்தில் இப்போது இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து இசைச் சீரோடைகளிலும் வெளியிடப்படும்
Related posts:
'கலர்ஸ் ஆஃப் கோலிவுட்', எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தே...
என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன்.!
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை ! சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் !!
இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை 24% சரிவு, வணிக ரீதியாக 62% குறைவு!
ஹம்ஸா அறக்கட்டளையின் மூலம் வசதிவாய்ப்பற்றவர்களுக்கு இலவச சிகிச்சை !
"’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நான் இணை ஹீரோ" - நடிகர் சரத்குமார்!