சிடிசி குழுமத்திலிருந்து ரூ. 215 கோடி நிதியை திரட்டியிருக்கும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் .!

தாக்கம் ஏற்படுத்தும் உலகின் முதல் முதலீட்டாளர் என்ற பெருமையினை கொண்டிருக்கும் சிடிசி குழுமத்திடமிருந்து டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் லிமிடெட் ( DAHCL ) ரூ.215 கோடி கடன் தொகையை திரட்டியிருக்கிறது. ஆஃப்ரிக்கா, தெற்காசியா மற்றும் இந்தியாவெங்கும் கண் சிகிச்சைக்கான தனது சங்கிலித்தொடர் நிறுவனங்களின் செயல்பாட்டை விரிவாக்குவதற்காகவும் மற்றும் உயர்தர சிறப்பு கண் சிகிச்சைக்காக சமீபத்திய தொழில்நுட்பங்களின் மீது கணிசமான முதலீடுகளை செய்வதற்காகவும் இந்த முதலீட்டுத்தொகை பயன்படுத்தப்படும். இக்குழுமமானது. அட்வான்ஸ்டு ஐ இன்ஸ்டிடியூட்உ டனான கூட்டுவகுப்போடு அதன் முதல் மருத்துவமனையை சமீபத்தில் நிறுவியிருக்கிறது. சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ஒரு உலகளாவிய முதலீட்டு நிறுவனமான டெமாசெக் நிறுவனத்திடமிருந்து, டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் லிமிடெட் , இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.270 கோடி முதலீட்டைப் பெற்றிருந்தது.

முதலீட்டைப் பெற்றிருந்தது. சிடிசி குழுமம் என்பது. யுகே அரசின் நிதியுதவியோடு இயங்குகின்ற மேம்பாட்டுக்கான நிதி அமைப்பாகும். சுகாதாரம், நிதிசார் சேவைகள், உட்கட்டமைப்பு, உற்பத்தி, உணவு மற்றும் விவசாயம், கட்டுமானத்துறை மற்றும் ரியல் எஸ்டேட், கல்வி ஆகிய பல் துறைகளில் கடந்த 70 ஆண்டுகளாக முன்னேறுகின்ற மற்றும் குறைவான முன்னேற்றம் கண்ட நாடுகளில் முதலீடு செய்வது மீது பிரதானமாக சிடிசி குழுமம் செய்து வந்திருக்கிற இந்தியாவில் சுகாதாரத்துறையில் இதன் நேரடி முதலீடுகளுள், ரெயின்போ ஹாஸ்பிட்டல் கேர் ஹாஸ்பிட்டல்ஸ், ஏஷியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், நாராயன ஹெல்த் ஆகியவையும் உள்ளடங்கும் . ” உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கண் பராமரிப்பு சேவைகளை கட்டுபடியாகக்கூடிய எளிய கட்டணத்தில் வழங்கவேண்டும் என்ற எங்களது தொலைநோக்கு திட்டத்தை நோக்கிய எமது பயணத்திற்கு சிடிசி – ன் முதலீடு மிகப்பெரிய அளவில் உதவும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் ( MS FRCS , FRC Ophth ) டாக்டர் அமர் அகர்வால் கூறினார் .

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பாக்டர் அதில் அகர்வால் பேசுகையில் , அதிக செலவினத்துடன் கூடிய கடனை குறைப்பதற்கு இந்த முதலீடு எங்களுக்கு உதவும் . சிறிய மருத்துவமனைகள் மற்றும் சங்கிலித்தொடர் மருத்துவமனைகளை கையகப்படுத்துவதற்கும் இந்த நிதியானது பயன்படுத்தப்படும் . ஆஃப்ரிக்கா மற்றும் தெற்காசியா மீது சிடிசி கூர்நோக்கம் கொண்டிருக்கும் நிலையில் , இக்குழுமமானது . தனது சர்வதேச செயலிருப்பை இன்னும் வலுவாக்க இக்குழுமம் திட்டமிட்டிருக்கிறது . மஹாராஷ்டிரா , கேரளா மற்றும் மத்திய இந்தியாவில் மிகத்தீவிரமாக விரிவாக்கம் செய்வதும் மற்றும் ஏற்கனவே நாங்கள் செயலாற்றி வரும் மாநிலங்களில் இன்னும் ஆழமாக ஊடுருவுவதும் எங்களது செயல்திட்டமாக இருக்கிறது . எமது மையங்கள் அனைத்திலும் , ஸ்மைல் , ஃபெம்டோ லேசர் மற்றும் ரோபோட்டிக் கண்புரை அறுவைசிகிச்சை போன்ற மிக நவீன தொழில்நுட்பத்தின் மீது நாங்கள் இன்னும் அதிகளவில் முதலீடு செய்யவிருக்கிறோம் . என்று கூறினார் . ஒட்டப்பட்ட IOL ( சிக்கலான லென்ஸ் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ) PDEK ( கருவிவிழி மாற்றுப் பதியத்திற்கான ஒரு மிக நவீன சிகிச்சையுக்தி ) , PhakoNIT ( ஒரு மி . மீட்டருக்கும் குறைவான கீறல் வழியாக கண்புரையை அகற்றுதல் ) போன்ற சிகிச்சைமுறைகளைக் கொண்டு கண் மருத்துவவியல் துறையில் புத்தாக்க செயல்பாட்டில் அகர்வால் குழுமம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது சிங்கிள் பாஸ் ஃபோர் த்ரோ புபிலோபிளாஸ்டி ( Pupilloplasty ) செயல் உத்தி மற்றும் பின்ஹோல் புபிலோபிளாஸ்டி (ppp) போன்ற புதுமையான சிகிச்சை உத்தியானது அகர்வால் குழுமம் கண்டறிந்த மிக சமீபத்திய சிகிச்சை கண்டுபிடிப்பாகும் . குறுகிய கோண கண் அழுத்த நோயில் சிக்கலான நேர்வுகளுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் மற்றும் கண்பாவை மறுகட்டமைப்பிற்கு உதவவும் இந்த அறுவைசிகிச்சை உத்தியானது பயன்படுத்தப்பட்டு வருகிறது . கல்வி மற்றும் பயிற்சியளிப்பு மீது அதிகளவில் கூர்நோக்கம் செலுத்திவரும் இக்குழுமம் நடத்துகின்ற பயிற்சியளிப்பு திட்டங்கள் , உலகெங்கிலுமிருந்து எண்ணற்ற கண் மருத்துவ நிபுணர்களை பங்கேற்பிற்கு ஈர்க்கின்றன . இளம் , வளர்ந்து வரும் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சியளிக்க ஒரு DNB ( முதுகலை பட்டப்படிப்பு ) திட்டத்தையும் மற்றும் கல்விசார் செயல்திட்டங்கள் பலவற்றையும் இது வழங்குகிறது ” .