திருத்தப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது.
குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்புமில்லை.இந்தியாவின் வளர்ச்சி,மேம்பாட்டிற்கு தேசிய குடியுரிமைப் பதிவேடு முக்கியமானது.தேசிய கணக்கெடுப்புப் பதிவேடு என்பது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கீடு ஆகும் இதன் மூலம் மக்களுக்கு தேவையான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் சிறந்த முறையில் உருவாக்க உதவும் என தெரிவித்தவர் 2010ஆம் ஆண்டு பா.சிதம்பரத்தை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை இப்பொழுது அவர் எதிர்ப்பது மிக தவறானது காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி பதட்டத்தை உருவாக்கி வருகிறார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார் மேலும்
தேசிய குடியுரிமை பதிவேட்டை மன்மோகன்சிங் ஆட்சியில் கொண்டுவர திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் இப்போது அவர்கள் எதிர்ப்பது ஏன்?சிஎஏ,என்.ஆர்.சி போன்றவற்றின் அருமையை அதிமுக நன்கு புரிந்து கொண்டுள்ளதால் மசோதாவை ஆதரித்தார்கள்.காங்கிரஸ் செய்தால் அது சரி, நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்தால் அது தவறு என்ற இரட்டை நிலைப்பாடு மிக தவறானது. தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து எந்த வித முடிவும் தற்போது வரை எடுக்கவில்லை
ஆனால் அதற்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அண்டை நாடுகளில் தாக்கப்படும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுபான்மை மக்களை முன்வைத்தே குடியுரிமை சட்ட திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.