கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது.!

கிரெடிட் கார்ட் என்பது நிதி நிறுவனங்கள் வழங்கும் கட்டண அட்டை. இதன் மூலம் சிறு கடன் பெறமுடியும். கிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்வோம்…

1. கிரெடிட் கார்டுகள் பணம் செலுத்தும் சேவையும் கடன் பெறும் சேவையும் சேர்த்து அளிக்கிறது. தேவைக்கு ஏற்ப எப்பொழுது வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
2. கிரெடிட் கார்டில் பயன்பாட்டில் மற்றும் அதன் சலுகைகள் மூலம் சலுகை புள்ளிகள் வழங்கப் படுகின்றது. செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சில புள்ளிகள் வழங்கப்படுகின்றது.
3. கேஷ்பே கிரெடிட் கார்டுகள் அமெரிக்காவில் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தக் கிரெடிட் கார்டை கொண்டிருப்பவர்கள் சில சமயம் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
4. பெட்ரோலிய நிறுவனங்கள், சினிமா நிறுவனங்கள், இணையதள விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த சில சலுகைகளை இந்த கிரெடிட் கார்டு மூலம் விளம்பர படுத்துகின்றனர்.
5. சில கிரெடிட் கார்டுகள் வட்டியில்லா கடன் கொடுக்கின்றன. அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னரே செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கு 18% வட்டி செலுத்தவேண்டும்.
தேவை இல்லாத செலவினங்களை குறைக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டுகளை உபயோகிப்பது சிறந்த நன்மைகளை தரும்.