கிரீன் கார்டு வேணுமா? அதிகமா சம்பாதியுங்க – அமெரிக்கா அறிவிப்பு!

அமெரிக்காவில் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள், அதிக வருமானம் பெறுபவர்களாக இருக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு துறை பிறப்பித்த உத்தரவில், உணவு, மருத்துவம், வீடு போன்ற அரசின் சலுகைளை சார்ந்திருப்பவர்கள், கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பித்தால், அது நிராகரிக்கப்படும். அமெரிக்க குடிமக்களுக்காக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை, அவர்கள் பயன்படுத்த முடியாது.

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வருபவர்கள், அரசின் சலுகைகளை எதிர்பாராமல், தங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிக வருமானம் கிடைக்கிறது என்பதை அவர்கள் உறுதிபடுத்த வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக, அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.